அறிமுகமான முதல் படமே பெரிய பாராட்டுக்களை பெற்று கொடுத்ததால், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆன பிரபல பாக்ஸர் ஒருவர் எம்.ஜி.ஆரின் வார்த்தையை மீற முடியாததால் பாக்ஸிங்கை விட்டுவிட்டு நடிகராக மாறியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர் எம்.ஜி.ஆர். இன்றும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வரும் நிலையில் தனது படங்களில் மக்களுக்கு உதவுவது, ஆளும் வர்க்கதை எதிர்த்து குரல் கொடுப்பது, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க பாடுவதுவது என ஒரு ஜனரஞ்சகமான ஹீரோவாக வலம் வந்தவர். மேலும், தனது படங்களில் தான் புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காதவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல் தன்னை தேடி வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை சாப்பிட வைத்து அனுப்பும் பண்பு கொண்ட எம்.ஜி.ஆர், திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தனது நிஜ வாழ்க்கையிலும், பலருக்கும் அள்ளிக்கொடுத்த வள்ளல் என்று போற்றப்படுகிறார். ரசிகர்களால் அன்புடன் வாத்தியார் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர், தனது திரைப்படம் முழுவதும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் சொல்லக்கூடிய நல்ல கருத்துக்கள் அடங்கியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தனது கடைசி படம் வரை அதில் உறுதியாகவும் இருந்தவர்.
அதேபோல் திரையுலகில் எம்.ஜி.ஆர் ஒரு வார்த்தை சொன்னால் அதற்கு எவரும் மறுவார்த்தை பேசமாட்டார் என்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ஆர் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக பாக்ஸிங் செய்வதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராக மாறியவர் தான் நடிகர் தியாகராஜன். 1981-ம் ஆண்டு கார்த்திக் ராதா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தியாகராஜன். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இதனால் தியாகராஜனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியிருந்தார். அந்த நேரத்தில் தீவிரமாக பாக்ஸிங் பயிற்சியில் இருந்த தியாகராஜனுக்க சார்ப்பட்டா பரம்பரையில் இருந்து பயிற்சி கொடுத்துள்ளனர். அப்போது ஒரு டோரன்மெண்ட் வைத்து அதில் தியாகராஜன் சண்டைபோடுவார் என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த நேரத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் பங்கேற்றுள்ளார்.
மேடையில் பேசிய எம்.ஜி.ஆர், தியாகராஜன் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள். அடுத்தடுத்து உங்களுக்கு பட வாய்ப்பு வருகிறது. உங்களை நம்பி தயாரிப்பாளர்கள் பணம் போட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் பாக்ஸிங் போய் ஏதாவது அடிபட்டால் அது தயாரிப்பாளரை பெரிதாக பாதிக்கும். இதனால் நீங்கள் இனி பாக்ஸிங்கு போக கூடாது. இது என் வேண்டுகோள் இல்லை கட்டளை என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் வார்த்தையை மறுக்க முடியாத தியாகராஜன் படங்களில் கவனம் செலுத்திவிட்டு பாக்ஸிங்கை மறந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.