லேடி சூப்பர் ஸ்டாருக்கு வில்லன்; சின்னத்தம்பி குஷ்புக்கு அண்ணன்; மதுவால் மரணித்த இந்த நடிகர் யார் தெரியுமா?

1989-ம் ஆண்டு பாசில் இயக்கத்தில் கார்த்திக் குஷ்பு நடிப்பில் வெளியான வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிராக அறிமுகமானார்.

1989-ம் ஆண்டு பாசில் இயக்கத்தில் கார்த்திக் குஷ்பு நடிப்பில் வெளியான வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிராக அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
Actor udhay Prakash

சினிமாவை பொருத்தவரை ஒரு படம் வெற்றி தோல்வி என்பதை நிர்ணையிப்பது அந்த படத்தின் வில்லன் கேரக்டர் தான் என்று சொல்லலாம். ஒரு படத்தில் வில்லன் ஸ்ராங்காக இருந்தால் ஹீரோ அவரை வீழ்த்த என்ன செய்கிறார் என்பதை சுவாரஸ்யமாக காட்ட முடியும். அதே சமயம் வில்லன் கேக்டர் டம்மியாக இருந்தால் ஹீரோ எவ்வளவு பெரிய ரிஸ்க எடுத்தாலும், அதில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும்.

Advertisment

வில்லன் கேரக்டர் சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும், அதை திரையில் தனது நடிப்பில் மெருகேற்றும் நடிகர்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் கிடைக்கும். அந்த வகையில் மக்கள் மனதில் கவனத்தை ஈர்த்த நடிகர் தான் உதய் பிரகாஷ். மணிகண்டன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழகத்தில் ஊட்டியில் 1964-ம் ஆண்டு பிறந்துள்ளார். ராணுவ வீரரான தந்தையின் கண்டிப்பான வளர்ப்பில் உதய் பிரகாஷ், வளர்ந்துள்ளார்.

ஆனாலும் ஒரு கட்டத்தில் சினிமா ஆசையில் வீட்டின் எதிர்ப்பை மீறி சென்னை வந்த அவர், பல இடங்களில் தங்கி கிடைத்த நண்பர்களின் உதவியுடன் சினிமாவில் நடிக்க வாய்ப்பை பெற்றுள்ளார். 1989-ம் ஆண்டு பாசில் இயக்கத்தில் கார்த்திக் குஷ்பு நடிப்பில் வெளியான வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிராக அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தனது 2-வது படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியுடன் இணைந்து நடித்துள்ளார்,

தனது நண்பர் ஒருவரை பார்க்க தனது அறைக்கு வந்த தயாரிப்பாளர் ஒருவரின் மனதை கவர்ந்த உதய் பிரகாஷ்க்கு, விஜயசாந்தியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கர்த்தவ்யம் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருந்த இந்த படம் வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. 2011-ம் ஆண்டு, சினேகா நடிப்பில் இந்த படம் ரீமேக்கும் செய்யப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பிஸியாக நடிகராக வலம் வந்தார் உதய் பிரகாஷ்.

Advertisment
Advertisements

1991-ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் 3 அண்ணன்களில் ஒருவராக நடித்து அசத்திய உதய் பிரகாஷ், சுந்தர்.சி இயக்கத்தில், மேட்டுக்குடி என்ற படத்திலும் நடித்திருந்தார். ரஜினிகாந்துடன் மன்னன், வீரா, உழைப்பாளி, சரத்குமாருடன் சாமுண்டி, பேண்டு மாஸ்டர், கட்டபொம்மன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார். கடைசியாக சூப்பர் டா என்ற படத்தில் நடித்திருந்த உதய் பிரகாஷ் கடந்த 2004-ம் ஆண்டு மரணமடைந்தார். முன்னணி வில்லன் நடிகராக வந்த இவர், குடிப்பழக்கத்தால் வீழ்ந்தார்.

அப்பா ராணுவ வீரரின் கட்டுப்பாட்டில் வளர்ந்த உதய் பிரகாகஷ் சினிமாவில் கிடைத்த நட்பு வட்டாரங்களுடன் இணைந்து மது குடிக்க தொடங்கி ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிடையாகிவிட்டார். இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல், இருந்த அவர், ஒரு கட்டத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அதன்பிறகு இயக்குனர் பி.வாசு அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையி்ல், சிகிச்சையில் இருக்கும்போதே அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

அதன்பிறகும் குடிக்க தொடங்கிய அவர், நடிகர் சங்கம் உள்ள தெருவில் நடுரோட்டில் விழுந்து மரணமடைந்தார், 1964-ம் ஆண்டு பிறந்த உதய் பிரகாஷ் 40 வயதில் 2004-ம் ஆண்டு மரணித்தார். குடிப்பழக்கம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் பாடாய் படுத்தும் என்பதற்கு உதய்பிரகாஷ் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: