19 வருடங்களாக அஜித்துடன் இணையாத வடிவேலு: இந்தப் படத்தில் ஏற்பட்ட மோதல்தான் காரணமா?

Tamil Cinema Update : முன்னணி நடிகரான அஜித் தமிழில் நடித்த 3-வது படமான பவித்ரா படத்தில் இருந்து, ஆசை, மைனர் மாப்பிள்ளை, ராசி, ஆனந்த பூங்காற்றே, ராஜா உள்ளிட்ட படங்களில் வடிவேலு நடித்துள்ளார்

Tamil Cinema Actor Ajith And Vadivelu Issue : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. கடந்த சில வருடங்களாக இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதங்களில் மீம்ஸ் மூலம் மக்கள் மத்தியில் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார். மேலும் வடிவேலு சீன் இல்லாமல் மீம் இல்லை என்ற சொல்லிவிடும் அளக்கு மீம் கிரிகேட்டர்கள் வடிவேலு படத்தை வித்தியாச வித்தியாசமாக பயன்படுத்தி வருகினறனா.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மோதலில் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதித்து தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டது. தற்போது இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து நாய் சேகர் ரிடடன்ஸ் என்ற படத்தின் மூலம் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் கடந்த சில நாட்களுக்கும் முன்பு வெளியான இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த வடிவேலு சர்ச்சைகளும் பெயர் போனவர். தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த், காமெடி நடிகர் சிங்கமுத்து என ஒரு சில நடிகர்களுடன் பிரச்சனையில் தான் இருந்துள்ளார். இவர்களுக்கு வடிவேலுவுக்கும் என்ன பிரச்சனை என்பது ஓரளவிற்கு ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் கடைசியாக ராஜா படத்தில் இணைந்து நடித்த நடிகர் அஜித்திற்கும் வடிவேலுவிற்கும் என்ன பிரச்சனை என்பது தமிழ் சினிமா வட்டாரம் அறிந்திடாத ஒரு தகவலாக உள்ளது.   

முன்னணி நடிகரான அஜித் தமிழில் நடித்த 3-வது படமான பவித்ரா படத்தில் இருந்து, ஆசை, மைனர் மாப்பிள்ளை, ராசி, ஆனந்த பூங்காற்றே, ராஜா உள்ளிட்ட படங்களில் வடிவேலு நடித்துள்ளார். ஆனால் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ராஜா திரைப்படமே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படமாகும். இதன்பிறகு கடந்த 19 வருடஙகளாக இவர்கள் இருவரும்இணைந்து நடிக்கவில்லை.

ராஜா படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாவே இவர்கள் இருவரும் அதன்பிறகு எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில், தகவல் வெளியானது ஆனால் இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இது தொடர்பாக ராஜா படத்தின் இயக்குநர் எழில் தனக்கு தெரிந்த தகலை கூறியுள்ளார்.

வெளியில் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள. ஆனால் அப்படி எதுவும் பிரச்சினை நடந்த மாதிரி தெரியவில்லை அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை நடந்ததற்காக அறிகுறிகளே இல்லை. அஜித் வடிவேலு இடையே சிறிய மனவருத்தங்கள் இருக்கலாம். ராஜா படத்தின் படப்பிடிப்பின்போதே இப்படி சொன்னார்கள். ஆனால் நான் படப்பிடிப்பில் கவனம் செலுத்தியதால, இது பற்றி எனக்க அவ்வளவாக தெரியவில்லை.

படம் முடிந்த பிறகு இருவருக்கும் மனவருத்தும் என்று தெரிந்தது. ஆனால் அதற்கான காரணம் இதுவரை எனக்கு தெரியவில்லை. அவர்களுக்குள் சின்ன மனவருத்தம் இருக்கலாம். ஆனால சமூக வலைதளங்களில் இதை பெரிதுபடுத்துகினறனர் என்று கூறியுள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actor vadivelu and actor ajith issue in 19 years update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com