சினிமா வெளிச்சமே படாத வடிவேலு குடும்பம்: 3 மகள்களுக்கும் சிம்பிளாக திருமணம்

Tamil Cinema Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வடிவேலுவுக்கு 3 மகள்கள் ஒரு மகன் இருந்தாலும், இவர்கள் இவ்வளவு காலம் மீடியாவின் வெளிச்சம் படாமல் இருந்துள்ளனர்.

Tamil Cinema Actor Vaduvelu Family Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் வடிவேலு. காமெடி கிங்காக புகழ்பெற்றுள்ள இவர், குணச்சித்திரம் மற்றும் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் நாயகனாக நடித்த வடிவேலு தொடர்ந்து, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன், எலி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த சிம்புதேவன் இயக்கிய இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்க இருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மோதலில் வடிவேலு படத்தில் இருந்து விலகினார். இது தொடர்பான ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வடிவேலுக்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் சில வருடங்கள் திரைத்துறையில் இருந்து வடிவேலு விலகியிருந்த நிலையில், தற்போது தடை நீக்கப்பட்டு வடிவேலு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சுராஜ் இயக்கத்தில் தயாராகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் ஷூட்டிங்கிற்காக லண்டன் சென்ற வடிவேவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தன்னை தானே தனிமைபடுத்திக் கொண்ட வடிவேலு சமீபத்தில் வீடு திரும்பிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக கூறியிரந்தார்.  

தமிழகத்தின் தென்மாவட்டமான மதுரையை சேர்ந்த வடிவேலு கடந்த 1988-ம் ஆண்டு வெளியான என் தங்கை கல்யாணி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அதன்பிறகு 1991-ம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் காமெடி நடிகராக அறிமுனார். தொடர்ந்து பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள வடிவேலு கடந்த 1988-ம் ஆண்டு சரோஜினி என்பரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். வடிவேலுவின் மகன் சுப்பிரமணி சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது.  

அந்த பேட்டியில் தனக்கு சினிமாவில் நடிக்க ஆசை உள்ளதாக கூறியிருந்தார். மேலும் கூலித்தொழிலாளி ஒருவரின் மகளாக புவனேஷ்வரி என்பரை திருமணம் செய்துகொண்ட சுப்பிரமணிக்கு தற்போது இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் கடைசி ஒரு மகனும் ஒரு மகளும் ட்வின்ஸ். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வடிவேலுவுக்கு 3 மகள்கள் ஒரு மகன் இருந்தாலும், இவர்கள் இவ்வளவு காலம் மீடியாவின் வெளிச்சம் படாமல் இருந்துள்ளனர்.

தற்போது வடிவேலுவின் ரி-என்ட்ரி அறிவிப்புக்கு பிறகே வடிவேலு மகன் யார் என்பது பலருக்கும் தெரிய வந்தது. ஆனால் இன்னமும் வடிவேலுவின் 3 மகள்கள் குறி்த்து இதுவரை மீடியாவில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இதில் வடிவேலுவின் மூத்த மகள் பெயர் கன்னிகா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சதீஷ்குமார் என்பருடன் திருமணம் நடைபெற்றது.

2-வது மகள் பெயர் கார்த்திகா. சி.ஏ முடித்துள்ள இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு  கணேஷ்குமார் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இவர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அடுத்ததாக வடிவேலுவின் கடைசி மகள் கலைவாணி. எம்பிஏ பட்டதாரியான இவருக்கு சென்னையை சேர்ந்த பொறியாளர் ராம்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சென்னை ஐராவத் நல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actor vadivelu daughters and son marriage update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express