scorecardresearch

வடிவேலு காட்சிகளை மொத்தமாக தூக்கிய சிவாஜி: இப்படி எல்லாம் நடந்துச்சா!

வடிவேலு 1992-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

வடிவேலு காட்சிகளை மொத்தமாக தூக்கிய சிவாஜி: இப்படி எல்லாம் நடந்துச்சா!

தேவர் மகன் படத்தில் வடிவேலு நடத்த காட்சியை சிவாஜி கணேசன் படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகர் வடிவேலு கூறியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு 1988-ம் ஆண்டு வெளியான என் தங்கை கல்யாணி என்ற படத்தில் ஒரு காட்சியில் தோன்றிய வடிவேலு பிறகு 1991-ம் ஆண்டு ராஜ்கிரன் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் காமெடி நடிகரான நடித்தார்.

தொடர்ந்து அதே ஆண்டு ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் நடித்த வடிவேலு தனது 3-வது படமாக விஜயகாந்துடன் சின்னக்கவுண்டர் படத்தில் நடித்தார். அதன்பிறகு இளவரசன் சிங்காரவேலன், தெய்வ வாக்கு உள்ளிட்ட படங்களில் நடித்த வடிவேலு 1992-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

கமல்ஹாசன் கதை திரைக்கதையில் பரதன் இயக்கிய இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. சிவாஜி கமல் இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தேவர் மகன் இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது. இந்த படத்தில் எசக்கி என்ற கேரக்டரில் வடிவேலு குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்நிலையில், தேவர் மகன் படத்தில் தான் நடித்த காட்சிகளை சிவாஜி முழுவதுமாக நீக்கிவிட்டார் என்று நடிகர் வடிவேலு பேசியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் நடிகர் வடிவேலு தேவர் மகன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

தேவர் மகன் படத்தில் நடித்தபோது, சிவாஜி ஐயா இறக்கும் சீன் படமாக்கினார்கள். அப்போது கமல்சார் என்னை கூப்பிட்டு சிவாஜி ஐயா இறக்கும் சீன் நீங்களும் சங்கிலி முருகனும் (நடிகர்) அழுதுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். அதன்படி படப்பிடிப்பு தொடங்கியது சிவாஜி ஐயா இறந்து கிடக்கிறார். நானும் சங்கிலி முருகனும் கதறி அழுகிறோம்.

ஒரு கட்டத்தில் பாடி (சிவாஜி) எந்திரிச்சிடுச்சி. ஏய் நிறுத்து நிறுத்து அவன்தான் (கமல்ஹாசன்) தான்டா என் மகன் நீங்க எதுக்கு கதறிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டார். அதன்பிறகு கமல்ஹாசனை அழைத்து கேட்க அவர் என்னிடம் எதையும் சொல்லிவிடாதே என்று கண்னை காட்டுகிறார். அதன்பிறகு கேமராமேன் பி.சி.ஸ்ரீராமை அழைத்தார் சிவாஜி.

ஸ்ரீராம் என்று கூப்பிட்டு ஏதோ சைகை காண்பித்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதன்பிறகு படப்பிடிப்பு பணிகள் எல்லாம் முடிந்து படம் வெளியானது. நான் படம் பார்க்க போனபோது அதில் நானும் சங்கிலி முருகனும் நடித்த சீனே இல்லை. மொத்தத்தையும் தூக்கிட்டாங்க. அப்போதூன் தெரிந்தது சிவாஜி ஐயா எதற்காக சைகை காண்பித்தார் என்று என கூறியுள்ளார் வடிவேலு.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor vadivelu said about devar magan sivaji ganesan