நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று : மருத்துவமனையில் அனுமதி

Tamil Cinema Update : வண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Cinema Actor Vadivelu Covid Positive : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்து இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் முத்திரை பதித்துள்ளார். அநத வகையில் இவர் நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

அதன்பிறகு ஒரு சில படங்களில் நாயகனாக நடித்த இவர், கடந்த சில வருங்களுக்கு முன்பு இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குநர் ஷங்கர் தயாரிக்க இருந்த இந்த படம் தவிர்க்க முடியா சில காரணங்களில் கைவிடப்படடது. ஆனால் இயக்குநர் ஷங்கர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

இதன்பிறகு சில வருடங்கள் படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருந்த நடிகர் வடிவேலு தற்போது இவர் மீதான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டனஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது

இந்நிலையில், படபபிடிப்பிற்காக லண்டன் சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவனையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலுவுக்கு நடத்தப்பட்ட முதற்கட் பரிசோதனையில், அவருக்கு மரபணு மாற்றம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actor vadivelu tested positive covid admitted hospital

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com