Advertisment

கதை தெரியாமல் நடித்தேன்... விஜய் கேட்ட ஒரே கேள்வி : ''கோட்'' பட அப்டேட் கொடுத்த நடிகர் வைபவ்

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் வைபவ், கோட் படம் குறித்தும், நடிகர் விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
Goat Movie Vijay

கோட் படத்தின் போஸ்டர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடித்து வந்தாலும் படத்தின் முழு கதை தனக்கு தெரியாது என்றும், இத்தனை நாள் படப்பிடிப்பில் இருந்தும் கதை பற்றி தெரியாதா என்று நடிகர் விஜய் தன்னிடம் கேட்டதாகவும் நடிகர் வைபவ் கூறியுள்ளார்.

Advertisment

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் கோட். கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், லைலா, சினேகா, யோகி பாபு, மோகன், அஜ்மல் அமீர், விடிவி கணேஷ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் விஜயுடன் இணைந்துள்ள நடிகர் வைபவ், முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கிய 'சரோஜா', 'கோவா', 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்', 'மங்காத்தா' போன்ற படங்களில் நடித்துள்ள வைபவ், தற்போத 'ரணம் அறம் தாவரே' படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படம் பிப்ரவரி 23 அன்று வெளியாக உள்ளது.

சமீபத்தில் நேர்காணலில் பங்கேற்ற வைபவ், கோட் திரைப்படம் தமிழ் சினிமாவில் 'எல்லா காலத்திலும் மிகச் சிறந்த' திரைப்படமாக இருக்கும் என்றும், படத்தின் கதை சைன்ஸ்பிக்ஷன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலம், நடிகர் விஜய்யுடன் நடித்தது குறித்து பகிர்ந்துகொண்ட அவர், படத்தின் கதை விஜய்க்கு தெரியும்.  ஆனால் கதையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாததால், நான் அவரைத் தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகுதான் விஜய்க்கு முழு கதை விவரம் தெரியும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கினார். மேலும் இத்தனை நாட்கள் படப்பிடிப்பில் இருந்தும், முழுக்கதையும் உனக்கு எப்படி தெரியவில்லை என்று நடிகர் விஜய் என்னிடம் கேட்டார். படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. படம் சிறப்பாக உருவாகி தயாராகி வருகிறது என்று கூறியுள்ளார். கோட் படம் 2024 இல் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment