தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகையாக வலம் வரும் வனிதா விஜயகுமார் இயக்குனராக அறிமுகமாக மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டாத நிலையில், இந்த படத்தை யூடியூப்பில் வெளியிட உள்ளதாக வனிதா ஒரு அறிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருந்த வனிதா, திருமணமாகி விவாகரதது ஆன பின் மீண்டும் திரைப்படங்களில் நடின்ன தொடங்கினார். தற்போது தனது 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ள வனிதா, மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை இயக்கியிருந்தார். அவரது மகள் ஜோவிகா தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். வனிதாவுடன் ராபர்ட் மாஸ்டர், ஸ்ரீமன், செஃப் தாமு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
கடந்த ஜூலை 11-ந் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ட்ரோல் மெட்டீரியலாக மாறி, பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும் படம் வெளியான அன்றே இந்த படத்தில் சிவராத்திரி என்ற எனது பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை நீக்க வேண்டும் என்று, இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்த்து வனிதா தரப்புப்பு பேரிடியாக விழுந்தது. இதன் பிறகு வனிதா பேசிய வீடியோ பதிவுகள், இளையராஜா குறித்து பேசியது அனைத்தும் இணையத்தில் வைரலானது.
திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஒடிடி தளத்தில் வெளியிடாமல் நேரடியாக தனது யூடியூப் சேனலில் வெளியிட உள்ளதாக வனிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "நான் அதிகமாக கடன் வாங்கி தான் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். எனக்கு பெரியதாக வருமானமும் கிடையாது, யாரும் துணையும் கிடையாது. என்னுடைய மகளும் இப்போதுதான் சினிமா பீல்டுக்கு வருகிறார். என் மகளிடம் இருந்த கொஞ்சம் பணமும், கொஞ்சம் கடனும் வாங்கி தான் இந்த படத்தை நாங்கள் எடுத்து முடித்தோம்.
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் வசூல் வரவில்லை. ஓடிடிக்கு கொடுத்தாலும் அது எங்களுடைய கடனை அடைக்க போதாது. காரணம் பெரிய படங்கள் என்றால் ஓடிடியில் நீங்கள் ஒரு முறை பார்த்தால் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். ஆனால், சின்ன படங்கள் நீங்கள் ஓடிடியில் பார்க்கும்போது வெறும் இரண்டு ரூபாய் தான் கிடைக்கும். இதனால் எங்களுக்கு அதிகமான கஷ்டம் தான் கிடைக்கிறது. அதற்காகத்தான் நான் இப்போது மாற்று ஏற்பாடு செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.
அதாவது என்னுடைய யூடியூப் சேனலில் வரும் வெள்ளிக்கிழமை இந்த படத்தை வெளியிடப் போகிறேன். அதற்கு என்னுடைய யூடியூப் சேனலில் மெம்பராக வேண்டும். அப்போது தான் இந்த படத்தை பார்க்கலாம். நீங்கள் தியேட்டரில் எவ்வளவு டிக்கெட் கொடுக்கிறீர்களோ அதைவிட குறைவான தொகை தான் மெம்பர் ஆவதற்கு கட்ட வேண்டியது இருக்கும். அதை நீங்கள் ஒருமுறை கட்டி விட்டால் இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ மட்டுமல்லாமல் பல விஷயங்களையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம்.
எனக்காக தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள். இந்த முறை இந்த விஷயத்தில் சப்போர்ட் பண்ணுவீங்க என்று நினைக்கிறேன். இப்போது திரை அரங்குகளில் ஒரு சில இடங்களில் மட்டும் தான் அந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் இந்த படத்தை பார்க்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இதில் மெம்பராக இணைந்தால் இந்த படத்தை பார்க்கலாம். தயவு செய்து எனக்கு இந்த சப்போர்ட் பண்ணுங்க" என்று கண்ணீரோடு பேசியுள்ளார்.