/indian-express-tamil/media/media_files/2025/09/10/vijay-antony-sasi-2025-09-10-13-50-39.jpg)
இயக்குனர் சசி நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாகவும் மாறியது. இதனிடையே, 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
தமிழ் சினிமாவில், இசையமைப்பாளர், நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், எடிட்டர் என பன்முக திறமையுடன் வலம் வரும் விஜய் ஆண்டனி, கடந்த 2016-ம் ஆண்டு பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார், அம்மா மீது அதிக பாசம் கொண்ட மகன், அவரது உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக, பிச்சை எடுக்கும் வேலை செய்வதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கியிருந்தார்.
விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையில் முக்கிய வெற்றிப்படமாக அமைந்த பிச்சைக்காரன் திரைப்படம் ஒடியா, மராத்தி, கன்னடா உள்ளிட்ட சில மொழிகளில் ரீமெக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றிப்படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்திருந்தார், இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், சமீபத்தில் வெளியான மார்கன் படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்து சக்தி திருமகன் என்ற படம் வெளியாக உளளது.
இதனிடையே 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, நடிகர் விஜய் ஆண்டனியும், இயக்குனர் சசியும் இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனர். இப்படத்திற்கு 'நூறு சாமி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் படம் பெரிய வெற்றிப்படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது, இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரை பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி அம்மா உன்போல் ஆகிடுமா என்ற வரிகளை பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தை ஃபாத்திமா விஜய் ஆண்டனி மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் தங்கள் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம், அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் ரமேஷ் பி பிள்ளை என்பவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜய் திஷான் மற்றும் ஸ்வாசிகா ஆகியோரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கு முன், சசி இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை தயாரித்திருந்தது, இந்த படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்திருந்தனர்.
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா ❤️#NooruSaamipic.twitter.com/KO8QDpmN8d
— vijayantony (@vijayantony) September 10, 2025
'பிச்சைக்காரன்' படத்தில் இடம்பெற்ற நுறு சாமிகள் இருந்தாலும் என்ற பாடலில் இருந்து இந்த படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது, இந்தப் படம் மே 1, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு சிவப்பு, மஞசள், பச்சை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சசி அடுத்து, ஹரீஷ் கல்யாண் மற்றும் சித்தி இட்னானி ஆகியோர் நடிப்பில்,'நூறு கோடி வானவில்' என்ற படத்தை தொடங்கினார், ஆனால் இந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகாத நிலையில், தற்போது மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.