Advertisment
Presenting Partner
Desktop GIF

இயேசு கிறிஸ்து குறித்து சர்ச்சை கருத்து : மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி

இயேசு கிறிஸ்து திராடசை ரசம் குடித்தார் என்று விஜய் ஆண்டனி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு கிறிஸ்துவ சபை அவருக்கு கண்டனம் தெரிவித்தது.

author-image
WebDesk
New Update
vijay antony reduces his salary by 25 % to help producers

விஜய் ஆண்டனி

மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எடிட்டர் என பன்முக திறமைகளுடன் பல படங்களில் நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. அந்த வகையில் தற்போது ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். மிருணாளினி என்பவர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள நிலையில், விஜய் ஆண்டனியே படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தபோது, இந்த படத்தின் டிரெய்லரில் முதலிரவில் ஏன் மது குடித்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்க, மது என்பதை ஆண் பெண் என்று வேறுபடுத்தி பார்க்க கூடாது. குடிப்பது அனைத்து பாலினவருக்கும் பொதுவான ஒன்று. முன்பு சாராயம் என்று குடித்துக்கொண்டிருந்தோம். இப்போது கம்பெனி பெயர்களில் குடித்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுிருந்தார்.

மேலும், இயேசு கிறிஸ்து திராடசை ரசம் குடித்தார் என்று இவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு கிறிஸ்துவ சபை விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்ததோடு, விஜய் ஆண்டனி பொது மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர் அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உருப்பினர்களே, வணக்கம்

நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறி இருந்தேன்.

ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து,தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப்போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறரக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து ' கொள்ள வேண்டாம்.

மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது.

என்றும் அன்புடன் உங்கள் விஜய் ஆண்டனி

என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment