நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த ஜென்மத்தில் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம் மகளே என்று விஜய் ஆண்டனியின் மனைவி தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுத நிகழ்வு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரது மகள் மீரா. 12-ம் வகுப்பு வடித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று அதிகாலை மீரா தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீராவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு மீராவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் மீராவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படடது.
முன்னணி நடிகர்கள் பலரும் மீராவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மீராவின் தோழிகள் என பலரும் கதறி அழுதுபடி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மீராவின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள தெரசா தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக திருப்பலி கூட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் மகளை நினைத்து விஜய் ஆண்டனியும் அவரது மனைவியும் கதறி அழுதனர்.
அப்போது விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா உன்னை கருவில் சுமந்ததை பெருமையாக நினைக்கிறேன். என்ன பிரச்சனை இருந்தாலும் சொல்லியிருக்கலாமே.. இந்த ஜென்மனத்தில் பிரிந்துவிட்டோம். அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் மகளே என்று கதறி அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“