scorecardresearch

 Beast Movie Release Updates: வெளியானது பீஸ்ட்; வழக்கமான விஜய் படம் அல்ல – ரசிகர்கள் கருத்து

Thalapathy Vijay, Pooja Hegde starrer Beast Movie Review, Movie Launch Today LIVE Updates: பீஸ்ட் படம் தமிழகம் முழுவதும் ஏற்கனவே பல சாதனைகளை முறியடித்துள்ள நிலையில், படத்தின் முதல்நாள் வசூல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

actor vijay beast

Beast Movie Launch Live News: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், மாஸ்டர் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார் மேலும் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லெ, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 2 பாடல்களும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியயுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2-ந் தேதி பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ந் தேதி (நாளை) வெளியாக உள்ளர். வழக்கமாக திரைப்படங்கள் வார இறுதி நாட்களில் வெளியாகி வரும் நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக பீஸ்ட் படம் வார நாளான புதன்கிழமை வெளியாகிறது. வார நாட்கள் என்றாலும் கூட தமிழகம் முழுவதும் முதல் நாள் கட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கு தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.  

பீஸ்ட் படம் வெளியாகி அடுத்த நாளில் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேஜிஎஃப் 2 படம் வெளியாக உள்ளது. பிரபல கன்னட நடிகர் யஷ் நடித்துள்ள இந்த படத்திற்கும் விஜயின் பீஸ்ட் படத்திற்கும் மற்ற மாநிலங்களில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனால் கர்நாடகாவில், பீஸ்ட் கேஜிஎஃப்-க்கு கடுமையாக போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் பீஸட் படத்திற்கு 800-க்கு மேற்பட்ட திரையரங்குகளும், கேஜிஎஃப் திரைப்படத்திற்கு 200-க்கு மேற்பட்ட திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள ஒப்பந்த இழுபறி காரணமாக கரூர் மாவட்டத்தில் பீஸ்ட் படம் வெளியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Read More
Read Less
Live Updates
14:42 (IST) 13 Apr 2022
100 பேருக்கு இலவச பெட்ரோல் வழங்கிய விஜய் ரசிகர்கள்!

பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் 100 பேருக்கு இலவச பெட்ரோல் வழங்கியுள்ளனர்

13:51 (IST) 13 Apr 2022
இன்றைய தினம் பீஸ்ட் தினம்

மாளவிகா மோகனன் ட்விட்டரில், “எனக்கு பிடித்த அனைத்து நபர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். இன்று பீஸ்ட் தினம்” என்று பதிவிட்டுள்ளார்

13:22 (IST) 13 Apr 2022
பீஸ்ட் படத்தின் இரவு நேர காட்சிக்கான கொண்டாட்டம்

பீஸ்ட் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் இரவு நேர காட்சிகளை பார்த்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்

13:02 (IST) 13 Apr 2022
பீஸ்ட் குறித்து சிபி சத்யராஜ் ட்வீட்

நடிகர் சிபி சத்யராஜ் ட்விட்டரில், “அன்புள்ள நடிகர்விஜய் அண்ணாவுக்கும், பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த அணியினருக்கும் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

12:08 (IST) 13 Apr 2022
உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா… பீஸ்ட் வசனம் வைரல்

உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா… எல்லா தடவையுல் இந்தியில் ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது என பீஸ்ட் படத்தில் விஜய் பேசிய வசனம் வைரலாகி வருகிறது

11:47 (IST) 13 Apr 2022
பீஸ்ட் படத்துக்கு கார்த்திக் சுப்பராஜ் வாழ்த்து

பீஸ்ட் படத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

11:14 (IST) 13 Apr 2022
பீஸ்ட் படத்தை காண காத்திருக்கிறேன்-பிரபல தயாரிப்பாளர்

பீஸ்ட் படத்தை காண காத்திருக்கிறேன் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்தார்.

10:37 (IST) 13 Apr 2022
பீஸ்ட் படத்தை அதிகாலை 3 மணிக்கு பார்த்த கதாநாயகி

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் படத்தை அந்தப் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே அதிகாலை 3 மணிக்கு முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடினார்.

10:22 (IST) 13 Apr 2022
பீஸ்ட் படத்தைக் காண விரும்பும் தெலுங்கு நடிகர்

உங்களின் முதல் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். நீங்கள் சிறப்பாக இயக்குகிறீர்கள். இந்தப் படமும் அதே போன்று இருக்கும் என்று நம்புகிறேன். நடிகர் விஜய் சாரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பீஸ்ட் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தெரிவித்தார்.

09:55 (IST) 13 Apr 2022
பீஸ்ட் படம் குறித்து அதிருப்தி

பீஸ்ட் படம் வேஸ்ட் என்று மனோபாலா விஜயன் ட்வீட் செய்துள்ளார். இந்தப் படத்தில் அனிருத் இசை மட்டுமே நன்றாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் சினிமா உற்று நோக்கி வருபவர் ஆவார். படத்தின் வசூல் குறித்தும் தகவலை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.

08:46 (IST) 13 Apr 2022
பீஸ்ட் குறித்து அந்தப் பட இயக்குநர் பதிவு செய்த ட்வீட்

இன்று முதல் பீஸ்ட் உங்கள் படம் என்று அந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் ட்வீட் செய்துள்ளார்.

08:39 (IST) 13 Apr 2022
பீஸ்ட் படத்தை காண வந்த நடிகைகள்

பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கிய டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா ஆகியோர் திரையரங்கில் பீஸ்ட் படத்தை கண்டு ரசித்தனர்.

08:35 (IST) 13 Apr 2022
பீஸ்டை உடனே விமர்சனம் செய்யாதீர்கள்-வேண்டுகோள் விடுத்த நடிகை

பீஸ்ட் படத்தை உடனே விமர்சனம் செய்யாதீர்கள் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த படம் எப்படி இருந்தாலும் ரசிகர்களை கொண்டாட விடுங்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

08:28 (IST) 13 Apr 2022
பீஸ்ட் படத்தை காண தயாராகுங்கள் – பிரபல இயக்குநர் ட்வீட்

பீஸ்ட் படத்தை காண தயாராகுங்கள் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் டுவீட் செய்துள்ளார்.

19:44 (IST) 12 Apr 2022
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் பீஸ்ட் ப்ரமோ

பீஸ்ட் படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பீஸட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிச்சர்ஸ் நிறுவனம், கடந்த சில நாட்களாக ப்ரமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள டைலாக் இல்லாத ப்ரமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

16:39 (IST) 12 Apr 2022
பீஸ்ட் திரைப்படம் இந்தியாவில் வெளியீடும் நேரம் என்ன?

விஜயின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முதல் காட்சி நாளை காலை 5 மணிக்கு இந்தியாவில் திரையிடப்பட் உள்ளது. அதற்கு முன்னதாக அமெரிக்காவில் ஒருநாள் மன்னதாக ஏப்ரல் 12 (இன்று) மாலை 3.30 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16:31 (IST) 12 Apr 2022
பீஸ்ட்-க்கு பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்

விஜயின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில், விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு அஜித்தின் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே எப்போதும் கடும் மோதல் இருந்து வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் செய்துள்ள இந்த காரியம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

16:29 (IST) 12 Apr 2022
உங்களை போல நானும் காத்துக்கொண்டிருக்கிறேன் – பீஸ்ட் படம் குறித்து எஸ்ஏசி

விஜயின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விஜய் அப்பா எஸ்ஏசி வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. “பாசமிகு பிள்ளைகளே வணக்கம். பீஸ்ட் நாளை கழித்து ரிலீஸ், உங்களை போல நானும் காத்துக்கொண்டிருக்கிறேன், ரசிகனாக. உங்கள் வெற்றி கொண்டாட்டத்திற்கு என் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

16:21 (IST) 12 Apr 2022
கரூரில் பீஸ்ட் வெளியாகாது : திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு

விஜயின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் கரூர் மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என கரூர் திரையரங்க உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் இழுபறி நீடிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு்ளளதாக கூறப்படுகிறது

16:15 (IST) 12 Apr 2022
ரிலீசுக்கு முன்பே வசூல் சாதனை நிகழ்த்தி வரும் பீஸ்ட்

பீஸ்ட் படம் தமிழகம் முழுவதும் நாளை வெளியாக உள்ள நிலையில், ரிலீசுக்குமுன்பே இப்படி வசூல்சாதனை நிகழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல சாதனைகளை முறியடித்துள்ளதாக நாளுக்கு நாள் தகவல்கள் பரவி வரும் நிலையில். பீஸ்ட் படம் முதல்நாள் எவ்வளவு வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

16:14 (IST) 12 Apr 2022
பீஸ்ட் பெட வெளியீடு : ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கும் நிறுவனங்கள்

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீஸ்ட் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், வார நாட்கள் என்பதால், பீஸ்ட் படத்தை பார்க்க சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்பு ரஜினி படத்திற்கு மட்டும் விடுமுறை அறிவிப்பை வெளியிட்ட நிறுவனங்கள் தற்போது அந்த பட்டியலில் நடிகர் விஜயை சேர்த்துள்ளனர்.

Web Title: Tamil cinema actor vijay beast movie release live update vijay beast movie beast news update beast mode