New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Vijay-2.jpg)
விஜய் பிறந்த நாள் பேனர்
பேனரில் மேடையில் விஜய் மைக் முன் நின்று பேசுவது போல உள்ள படத்துடன், பின்புறத்தில் தமிழக சட்டமன்ற கட்டிடம் உள்ளது
விஜய் பிறந்த நாள் பேனர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்டவுட் பேனர்கள் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய் ரசிர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு நாளை (ஜூன் 22) பிறந்தநாள். இந்த பிறந்தநாளையொட்டி புதுவையில் வாழ்த்து சுவரொட்டிகள், பல்வேறு விதமான பேனர்கள், நடுக்கடலில் பேனர், ஆழ்கடல் நீரினுள் பேனர் என ரசிகர்கள் பேனர் வைத்து அசத்தியுள்ளனர். மேலும் புதிய பஸ் நிலையம் அருகே வைத்துள்ள பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த பேனரில் மேடையில் விஜய் மைக் முன் நின்று பேசுவது போல உள்ள படத்துடன், பின்புறத்தில் தமிழக சட்டமன்ற கட்டிடம் உள்ளது போல் அமைத்துள்ளனர். மைக் போடியம் ஸ்டாண்டில் ச.ஜோசப் விஜய், தமிழக முதலமைச்சர் என குறிப்பிட்டுள்ளனர். இந்த பேனரை உருளையன்பேட்டையை சேர்ந்த ஆளப்பிறந்தவன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ளனர்.
பேனரில் 2026-ல் சட்டமன்றத்தில் உங்களின் குரல் "தமிழக மக்களின் உரிமை குரல்"என ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். அதோடு ரசிகர்கள் மேக்கிங் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளனர். பின்னால் பின்னணி குரலில் தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும்? என கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு தளபதி விஜய்.. தளபதி விஜய்.. என பல குரல்கள் எழுப்பும் வகையில் ஆடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.