தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிகர் யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸாக கொடுத்துக்க கிஃப்ட் தொடர்பான ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஷாம் ஆகியோருடன் நடிகர் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த படம் விஜய் யோகிபாவு காம்போவின் 6-வது படமாகும். ஏற்கனவே வேலாயுதம், மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படங்களின் மூலம் இவர்களுக்கு இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகிபாபு மீது தனி அன்பு வைத்துள்ள நடிகர் விஜய் தற்போது அவருக்கு கிரிக்கெட் பேட ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள யோகிபாபு, இந்த பேட்டை சர்ப்ரைசாக எனக்கு கொடுத்த விஜய் அண்ணாவுக்கு தேங்க்யூ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உள்ள யோகி பாபு பிஸியான நடிகராக இருந்தாலும், தனது ஓய்வு நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
Intha bat aa enaku surprise a kodutha Vijay anna ku thankyou🤝@actorvijay #thalapathyvijayyogibabu pic.twitter.com/SI08LJNrFJ
— Yogi Babu (@iYogiBabu) December 10, 2022
இவர் கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணைதளங்களில் வைரலாகி வருகன்றனர். அவரது கிரிக்கெட் திறமையை பாராட்டும் வகையில் விஜய், யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்துள்ளார். தற்போது இவர்களின் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil