Advertisment

இப்போ இல்ல, 13 வயதிலேயே நடனத்தில் அசத்திய விஜய் : அன்சீன் வீடியோ வைரல்

தமிழ் சினிமாவில் நடனத்தில் அசத்தி வரும் தளபதி விஜய் தனது 13 வயதில் நடனமாடிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Thalapathy Vijay Actin

தளபதி விஜய்

இயக்குனரின் மகன் என்ற அடையாளத்துடன் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் தளபதி விஜய். இவர் தனது 13 வயதில் நடனமாடிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

80-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இதில் தான் இயக்கிய பல படங்களில் தனது மகனை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து அசத்திய இவர், 90-களின் தொடக்கத்தில் விஜயை நாயகனாக வைத்து நாளை தீர்ப்பு என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.

அதன்பிறகு, விஜய் நடிப்பில், ரசிகன், தேவா, உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இதில் ஒரு சில படங்கள் சுமாரான வெற்றியை பெற்றிருந்த நிலையில், விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம், விஜயை குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை பலரையும் அவரது ரசிகர்களாக மாற்றியது. அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல், பிரஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் தனது அடுத்த படத்திற்கு தாயராகி வருகிறார். இடையில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் நடிப்பில் இருந்து விலக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாமல், பாடல் பாடுவதிலும் பிரபலமான விஜய், நடனத்திலும் தனித்திறமையுடன் இருக்கிறார். அவரது நடனத்திற்காகவே பல ரசிகர்கள் அவரது திரைப்படத்தை பர்க்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் வெளியான பீஸ்ட், வாரிசு, மற்றும் லியோ படங்களில் விஜயின் நடனம் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்த நிலையில், பலரும் பாராட்டும் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே விஜய் தனது 13 வயதிலேயே நடனத்தில் அசத்தியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த விஜய், நடனத்தில் அசத்தியுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 1987-ம் ஆண்டு வெளியாக சட்டம் ஒரு விளையாட்டு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment