நடிகர் விஜய் மகள் இவர் தானா? லைக்ஸை குவிக்கும் வைரல் புகைப்படங்கள்

இந்திய சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக விஜய் இருந்தாலும், அவரது குடும்பத்தினரை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்திய சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக விஜய் இருந்தாலும், அவரது குடும்பத்தினரை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
K Rajan says Vijay will fail in politics

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பெரிய ஸ்டாராக உயர்ந்துள்ளவர் தளபதி விஜய். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், லியோ படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்க விஜய் தயாராகி வருகிறார்.

publive-image

அதோடு மட்டுமல்லாமல் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்காக ஆயத்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வரும் நிலையில் விஜய் அவ்வப்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

Advertisment
Advertisements
publive-image

இந்திய சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக விஜய் இருந்தாலும், அவரது குடும்பத்தினரை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் குறிப்பாக விஜய் மகன் மற்றும் மகளை பொதுவெளியில் கண்டிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். இதனால் விஜய்யின் மகள் மற்றும் மகன் எப்படி இருக்கிறார்கள் என்றும் கூட பலரும் தெரியாது.

publive-image

ஆனால் தற்போது விஜய் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் தளபதியின் மகளா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வரும் நிலையில், படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: