/indian-express-tamil/media/media_files/jO98DDjdQaJaPAKcnemU.jpg)
தமிழ் சினிமாவில் சாதாரண ஒரு நடிகரின் படம் தொடங்கி உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர்கள் படங்கள் வரை வெளியான உடனே ஆன்லைனில் லீக் ஆவது வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள விஜயின் கோட் படமும் இணைந்துள்ளது.
லியோ படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடித்துள்ள படமட கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், மைக் மோகன், லைலா, சினேகா, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் ஏ.ஐ.டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
படத்தின் பாடல்கள் வெளியானபோது கூட எதிர்பார்ப்பு இல்லாத கோட் திரைப்படம், டிரெய்லர் வெளியானது முதல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 5) வெளியாகியுள்ள கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. நடிப்பை விட்டு அரசியலுக்கு போக உள்ள விஜய்க்கு பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரசிகர்கள் மத்தியில் எழுந்த பெரிய எதிர்பார்ப்பை கோட் படம் பூர்த்தி செய்திருந்தாலும், படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் கோட் படம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த பைரசி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு படையின் முன்னாள், அதிகாரியான காந்தி (விஜய்) தனது நடவடிக்கையில் செய்த தவறை, ஓய்வுக்கு பின் தனது குழுவுடன் இணைந்து எப்படி தீர்க்கிறார் என்பது தான் கோட் படத்தின் கதை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us