Advertisment

வயசு ஆகிடுச்சி... எப்படினு நினைச்சீங்களா? ஆக்ஷனில் அசத்தும் விஜய்; மிரட்டும் கோட் டிரெய்லர்!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Goat Movie Trailer

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தற்போது அரசியல்வாதியாக புதிய அவதாரம் எடுத்துள்ள இவர், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு அப்டேட்டும் கவனம் பெற்று வருகிறது.

அந்த வகையில் லியோ படத்திற்கு பின் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா, பிராஷாந்த், அஜ்மல், மைக் மோகன், மீனாட்சி, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் 5-ந் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அவ்வப்போது பாடல்கள் மற்றும் புதிய அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இதில் இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த 3 பாடல்களுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசர் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் வெளியான 3-வது பாடலில், டிஐஜி செய்த விஜயின் வீடியோ கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழுவினர், படத்தின் ஆடியோ எபிக்யூ (EPIQ) தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. படத்தின் பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும்,  இந்த மாதிரியான படத்தின் அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில், கோட் படத்தின் டிரெய்லர் இன்று (ஆகஸ்ட் 17) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. படம் வெளியான இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரில் ஆக்ஷனில் மிரட்டும் விஜய், காமெடியிலும் அசத்துகிறார். குறிப்பாக மங்காத்தா படத்தில் அஜித் சொல்லும், இனிமே குடிக்கவே கூடாதுடா என்ற வசனமும், கில்லி படத்தில் வரும் மருதமலை மாமணியே முருகையா பாடலும் பழைய விஜயயை பார்ப்பது போல் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment