ஜெயம்ரவி படத்திற்காக எழுதப்பட்ட ஒரு பாடல், ரிஜக்ட் செய்யப்பட்டு அந்த பாடல் பிறகு விஜய் படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் பெரிய ஹிட் பாடலாக இன்றும் நிலைத்திருக்கிறது. அது என்ன பாடல் தெரியுமா?
ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெயம் ரவி அடுத்து எம்.குமரன் என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், ரவி தேஜா நடிப்பில் வெளியான அம்மா நானா ஒ தமிலா அம்மாயி என்ற படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படத்தை மோகன்ராஜா இயக்கியிருந்தார். அசின் நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கும் பின் நடிகை நதியா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த நிலையில், அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தின் பாடல் கம்போசிங்கின்போது, பாடல் ஆசிரியர் யுகபாரதி ஒரு பாடல் எழுதியுள்ளார். இந்த பாடலை கேட்ட மோகன்ராஜா இந்த பாடல் வேண்டாம். ட்ரெண்டிங்கான வார்த்தைகள் இருக்கும்படி ஒரு பாடலை எழுதி ஹிட் கொடுக்கலாமே என்று கூறியுள்ளார்.
இயக்குனரிடம் பேச்சை கேட்ட யுகபாரதி உடனாடியாக பாடலை எழுதி கொடுத்துள்ளார். அந்த பாடல் தான் ‘அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ’ என்ற பாடல். இந்த பாடல் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இசையமைப்பாளர் வித்தியாசகரிடம் இருந்து யுகபாரதிக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு விஜய் நடிக்கும் மதுர படத்திற்கு சூழ்நிலை சொல்லி ஒரு பாடல் எழுதுங்கள் என்று சொல்ல, எம்.குமரன் படத்திற்காக எழுதி ரிஜக்ட் செய்யப்பட்ட பாடலை கொடுத்துள்ளார்.
அந்த பாடல் வித்தியாசகருக்கு பிடித்துபோக அப்போதே டியூன் அமைத்து பாடலை பதிவு செய்துள்ளனர். அந்த பாடல் தான் ‘கண்டேன் கண்டேன் உன் காதலை நான் கண்டேன்’ என்ற பாடல். இந்த இரு பாடல்களுமே பெரிய வெற்றியை பெற்றிருந்தது. ஜெயம்ரவி படத்திற்காக எழுதப்பட்ட ஒரு பாடல், விஜய் படத்தில் இடம்பெற்று பெரிய வெற்றியை பெற்றுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”