New Update
/indian-express-tamil/media/media_files/uXhrYjJIcRtbNei2TB0k.jpg)
நடிகரு விஜய் பாடல் ஆசிரியல் விவேக் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் ஏற்கனவே நடிகர் சாந்தனுவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது பாடல் ஆசிரியர் விவேக் வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர் தளபதி விஜய். வெளியில் மட்டுமல்லாமல், இவருக்கு திரையுலகில் உள்ள நட்சத்திரங்களே ரசிகர்களாக உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க பிரபலங்கள் இயக்குனர் அட்லி, நடிகர் சாந்தனு, விஷால் உள்ளிட்டோரை சொல்லலாம். அந்த வரிசையில், பாடல் ஆசிரியர் விவேக்-ம் ஒருவர். விஜயின் தீவிர ரசிகரான இவர், தொடர்ந்து அவரது படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
குறிப்பாக விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில், இடம்பெற்ற ஆளப்போறன் தமிழன் என்ற பாடல், பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்காக பாடலாக பயன்படுத்தும் அளவுக்கு பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. இந்த பாடலை எழுதியவர் விவேக். அதே போல் சர்க்கார், பிகில், பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட விஜயின் பல படங்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ளார்.
Recent sensation @SaiAbhyankkar meets #ThalapathyVIJAY😉 pic.twitter.com/CKhktAmqme
— The Greatest of All Time (@sarathvijay967) August 16, 2024
சாராதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட பாடல் ஆசிரியர் விவேக், விரைவில் அப்பா ஆக உள்ள நிலையில், சமீபத்தில் அவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தளபதி விஜய் பங்கேற்று விவேக் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் விஜயுடன் இயக்குனர் அட்லியும் பங்கேற்றிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.