தற்போது நடித்துவரும் ஜனநாயகன் படமே தனது நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவித்துள்ள தளபதி விஜய், அடுத்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில்? அவரின் கடைசி படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெறறிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது தனது 30 ஆண்டுகால நடிப்பு வாழ்க்கையை விட்டு விலக உள்ளதாகவும், அறிவித்து பலருக்கும், அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அரசியல் கட்சி தொடங்கப்பட்டதில் பலர் மகிழ்ச்சியடைந்தாலும், ஒருசிலர் சினிமாவை விட்டு விலகுவது ஒரு தற்காலிக முடிவாக இருக்கலாம், நிரந்தர முடிவாகக இருக்காது நம்பினர்.
இருப்பினும், எச் வினோத் இயக்கிய "ஜனநாயகன்" திரைப்படம் அவரது கடைசி படமாக இருக்கும் என்பதை விஜய் மற்றும் அவரது குழுவினர் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் மமிதா பைஜு போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால், அவரின் செயல்கள் குறித்து அதிகமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இதன் காரணமாக அவர் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் அப்டேட்கள் குறித்து அவரது ரசிகர்களை எதிர்பார்க்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுமான அவர்கள் தற்போது 2026 சட்டசபை தேர்தலுக்காக தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். இதனிடையெ ஜனநாயகன் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பரபரபப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் ஷூட்டிங், வரும் ஜூன் மாதம் இறுதியில் முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்து.
இதனிடையே விஜய் சினிமாவிலிருந்து விலகுவது தற்காலிகமானது என்ற குரல்கள் வலுத்தாலும், த.வெ.கஆண்டு விழாவில் பேசிய விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் தான். அதன்பிறகு முழுநேர அரசியல் என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.