தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ரன்னிங் டைம்,மற்றும் சென்சார் சான்றிதழ் தொடர்பான அப்டேட்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஒரு நடிகராக வலம் வரும் இவர் தற்போது லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் 19-ந் தேி லியோ உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
லியோ படம் குறித்து எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக அவ்வப்போது வெளியான அப்டேட்கள் பாடல்கள் இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடந்த வாரம் வெளியான லியோ படத்தின் டிரெய்லர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடைடையே தற்போது லியோ படத்தின் ரன்னிங் டைம், சென்சார் சான்றிதழ் மற்றும் எந்தெந்த வார்த்தைகளுக்கு மியூட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி லியோ படம் யு/ஏ தணிக்கை சான்று பெற்றுள்ள நிலையில், தணிக்கை வாரியம் பரிந்துரைத்த கட் மற்றும் சேர்ப்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் வியோ படம் 164 நிமிடங்கள் மற்றும் 54 வினாடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக சமர்பிக்கப்பட்டதாகவும், சென்சார் முடிவில் படம் 164 நிமிடங்கள் 27 வினாடிகளாக குறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
படத்தில் சில இடங்கில் கட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பல கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தணிக்கை குழு பல இடங்களில் மது மற்றும் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு அதனை மறுக்கும் விதமாக டேக் போஸ்ட் வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. தணிக்கை அறிக்கையின்படி, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கொடூரமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் லியோ படம் படம் உலக அளவில் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'லியோ' படத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே பல வெளிநாட்டு இடங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஓரிரு நாட்களில் தமிழகம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“