தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மாஸ்டர் படத்திற்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்துள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் 19-ந் தேதி லியோ படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், படத்தின் முக்கிய அப்டேட்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் செப்டம்பர் 30-ந் தேதி நடக்க இருந்த லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியதால், அவர்களை சமாதானப்படுத்த படக்குழு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு லியோ படத்தின் 2-வது பாடலான படாஸ் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ஏற்கனவே வெளியான நான் வரவா என்ற பாடல் தற்போதுவரை விஜய் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், தற்போது 2-வது பாடலான படாஸ் விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. இதனிடையே லியோ படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த எதிர்பார்ப்பை புரிந்துகொண்ட தயாரிப்பு நிறுவனம் அடுத்த அப்டேட்க்கு தயாராகியுள்ளது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு லியோ படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் இணைதளங்களில் தங்களது கவனத்தை திருப்பியுள்னர். அதன்படி தற்போது லியோ அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் லியோ படத்தில் டிரெய்லர் வரும் அக்டோபர் 5-ந் தேதி வெளியாகும் என்று ஒரு போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் ஆர்டர் லியோ டிரெய்லர் தயாராகி வருகிறது. உங்களது டெலிவரி பார்ட்னர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ வரும் அக்டோபர் 5-ந் தேதி உங்களுக்கு வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“