scorecardresearch

லண்டனில் இருந்து வர்ரேன்… உங்க மகன் எங்க… விஜய் அம்மாவுக்கு ஷாக் கொடுத்த மருமகள் சங்கீதா

காதலுக்கு மரியாதை, கில்லி, துப்பாக்கி கத்தி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள விஜய் இதுவரை 66 படங்களில் நடித்துள்ளார்.

லண்டனில் இருந்து வர்ரேன்… உங்க மகன் எங்க… விஜய் அம்மாவுக்கு ஷாக் கொடுத்த மருமகள் சங்கீதா

தளபதி விஜய் காதல் கதை அவரது திருமணம் குறித்து அவரது அம்மா ஷோபா கூறியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் வசூல் மன்னனாகவும் இருப்பவர் தளபதி விஜய். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான விஜய் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த விஜய், விஜயகாந்துடன் இணைந்து செந்தூரப்பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆனாலும் ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்த விஜய்க்கு அவர் விரும்பிய வெற்றியை கொடுத்த படம்தான் பூவே உனக்காக. விக்ரமன் இயக்கிய இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், விஜய்க்கு உண்டான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகப்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் பெண் ரசிகைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தது.

அதனைத் தொடர்ந்து காதலுக்கு மரியாதை, கில்லி, துப்பாக்கி கத்தி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள விஜய் இதுவரை 66 படங்களில் நடித்துள்ளார். தற்போது 67-வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். லண்டனை சேர்ந்த சங்கீதா விஜயின் தீவிர ரசிகர் மட்டுமல்லாமல் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழகத்தில் பெண் கிடைக்காமலா லண்டனில் பெண் பார்த்தீர்கள் என்று விஜயின் அம்மா ஷோபாவிடம் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த அவர், எதுவும் ப்ளான் பண்ணி பண்ணவில்லை. 1996-ம் ஆண்டு விஜயை பார்க்க தனது சகோதரிகளுடன் சங்கீதா கிளம்பி வந்துவிட்டார். எங்கள் வீட்டு வாசலில் நின்றுகொண்டு விஜயை பார்க்க வேண்டும் என்று கேட்டார். அப்போது விஜய் காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார். அங்கு சென்று பாருங்கள் என்று சொன்னவுடன் உடனடியாக அங்கு சென்று சந்தித்துள்ளனர்.

விஜய் அவர்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். விஜயின் அப்பாவுக்கு இவர்களை மிகவும் பிடித்துவிட்டது. அதன்பிறகு இவர்களுக்குள் சில மாதங்கள் காதல். அதன்பிறகு திருமணம் வாழ்க்கை தொடங்கினர் என்று கூறியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor vijay love and wedding story his mother flashback