New Update
/indian-express-tamil/media/media_files/DKeabD8Ai4bvaeu2XSnL.jpg)
தனது பெற்றோருடன் நடிகர் விஜய்
உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ள தனது தந்தையை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
தனது பெற்றோருடன் நடிகர் விஜய்
நடிகர் விஜய் அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், தற்போது எஸ்.ஏ.சி அறுவை சிகிச்சை செய்து கொண்டதை தொடர்ந்து நடிகர் விஜய் அவரை நேரில் சநதித்து நலம் விசாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ப்ரமோஷன் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், விரைவில் ஆடியே வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து தனது 68-வது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இதற்காக அமெரிக்கா சென்ற நடிகர் விஜய் போட்டோஷூட்டில் பங்கேற்றிருந்தார். அதன்பிறகு கடந்த 12-ந் தேதி சென்னை திரும்பிய நடிகர் விஜய் தனது தந்தையை நேரில் சந்தித்துள்ளார்.
உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து. 😊 pic.twitter.com/ZDCLws2gGt
— S A Chandrasekhar (@Dir_SAC) September 14, 2023
சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தனது வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய் தனது தந்தையை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின்போது எஸ்.ஏ.சி – ஷோபா மற்றும் விஜய் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.