New Update
/
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய் அடுத்த படத்திற்கு தயாராகி வரும் நிலையில், தற்போது அவர் தனது பெற்றோரான எஸ்.ஏ.சந்திர சேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், கைவசம் இருக்கும் படங்களை முடித்துக்கொண்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அரசியலிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். 80-90 களில் முன்னணி நடிகராக இருந் மைக் மோகன் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் மூலம் விஜயுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
சமீபத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவதார் படத்தில் பணியாற்றிய கிராபிஃஸ் குழுவினர் இந்த படத்தில் பணியாற்றுகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்து யாருடைய இயக்கததில் நடிக்க உள்ளார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் அரசியலில் விஜயின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனிடையே விஜய் தற்போது தனது பெற்றோர்களான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோரை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.