தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் பரிசாக அளித்தார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மாணவி நந்தினியும் நடிகர் விஜயும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வாரிசு படத்திற்கு பிறகு தற்போது லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதனிடையே அவர் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் விஜய்யும் அரசியல் கட்சி தொடங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை விஜய் நேரில் சந்தித்து பரிசளித்து பாராட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், விஜய் இன்று நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் மாணவர்களை சந்தித்து அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்ளஸ் பரிசளித்தார் விஜய்.
அதனைத் தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்த விஜய்க்கு மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் பரிசு ஒன்றை அளித்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய், அசுரன் படத்தில் தனுஷ் கல்வி குறித்து பேசிய வசனத்துடன் கல்வி தான் நம் வாழ்வில் மிக முக்கியம் என்று கூறியுள்ளார்.
மேலும் புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும் பெரியார் அம்பேத்கர் காமராஜர் போன்ற தலைவர்கள் பற்றி மாணவர்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். நாளைய வாக்காளர்கள் நீங்கள் தான். அடுத்து புதிய தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்தே நம் கண்ணை குத்துவது தான் இப்போது நடந்து வருகிறது. அதுதான் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது.
ஒவ்வொரு மாணவியரும் தங்கள் பெற்றோர்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தடுக்க முயற்சிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நடக்கும். எதிர்காலத்தில் நீங்கள் தான் முதல் தலைவமுறை வாக்காளர்கள். இது நடந்தால் மட்டுமே கல்வி ஒரு முழுமையடைந்தாக நாம் உணர முடியும். உங்கள் அருகில் தேர்வில் தோல்வியடைந்திருக்கும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். இதுவே நீங்கள் என்று தரும் பரிசு.
மாணவர்களாகிய நீங்கள் எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவு எடுக்காதீர்கள். உங்களால் இது முடியாது என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கு. அதை பெரியதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று தளபதி விஜய் பேசியுள்ளார்.
முன்னதாக ஒரு குட்டி ஸ்டோரி கூறிய விஜய், பள்ளி - கல்லூரிகளுக்கு சென்று, முதல் மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு படிப்பது மட்டுமே, முழுமையான கல்வி கிடையாது. பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று பல பாடங்களை நாம் படிக்கலாம். ஆனால் அதனை மறந்த பின்பும் நம்முடன் எந்த விஷயம் கூடவே இருக்குமோ அது தான் நாம், வாழ்க்கைக்காக கற்றுக்கொண்ட பாடம். இதுஐன்ஸ்டீன் அவர்கள் சொன்ன விஷயம்.
அப்படி கடைசி வரை உங்களுடனே இருப்பது உங்களின் கேரக்டரும் சிந்திக்கும் திறனும் தாக். இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தான் இது முழுமையான கல்வியா இருக்கும். பணத்தை இழந்தால் ஒரு சின்ன பொருளை இழந்த மாதிரி. ஆரோக்கியத்தை இழந்தால் சிலவற்றை இழந்தது போல... ஆனால் கேரக்டரை இழக்காதீர்கள். இதை இழந்தால் எல்லாம் இழந்துவிட்ட மாதிரி. அதற்காக வாழ்க்கயைில் எதையும் என்ஜாய் பண்ண கூடாது என்று இல்லை. இருப்பது ஒரு வாழ்க்கை அதனை நன்றாக என்ஜாய் செ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“