ஜெயலலிதாவால் 3 நாள் ஷூட்டிங் தாமதம்; முதல் நாளே லேட்டாக வந்த விஜய்: பூவே உனக்காக பட மெமரீஸ்!

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

author-image
WebDesk
New Update
Pove Unakka Vijay

தமிழ் சினிமாவில் விஜய் முன்னணி நடிகராக உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த படம் பூவே உனக்காக. ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு முதல் நாளே தாமதமாக வந்துள்ளார் விஜய். இந்த தகவலை அந்த படத்தின் உதவி இயக்குனர் ராஜகுமாரன் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய், 1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில், பூவே உனக்காக என்ற படத்தில் நடித்திருந்தார். சங்கீதா நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் அஞ்சு அரவிந்த், நம்பியார். நாகேஷ், ஜெய் கணேஷ், மலேசியா வாசுதேவன், சார்லி, விஜயகுமாரி, சுகுமாரி, உள்ளிட்ட பல நசட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.  எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

தான் காதலித்த பெண் வோறொருவரை காதலிக்கிறார் என்று தெரிந்துகொண்ட ஹீரோ அவர்கள் காதலை சேர்த்து வைக்க, செய்யும் செயல்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜயின் சிறப்பான படங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக பூவே உனக்காக இருக்கும். 
அதேபோல், விக்ரமன் இயக்கிய முதல் படம் புது வசந்தம் ஒரு வித்தியாசமான கதைக்களம் என்றாலும் கூட, பூவே உனக்காக அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த படமாக இன்றுவரை நிலைத்திருக்கிறது.

இந்த படத்தை பற்றி ஒரு நேர்காணலில் பேசிய, விக்ரனின் உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரன், இந்த படத்தின் ஷூட்டிங் 1995-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி நடைபெற்றது.தேதி இவ்வளவு சரியாக ஞாபகம் வைத்திருக்க ஒரு காரணம் இருக்கிறது, இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் 5-ந் தேதி முடிவு செய்திருந்தோம். நம்பியார், நாகேஷ், சுகுமாரி, ஜெய்கணேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்த படம். ஆனால் செப்டம்பர் 5-ந் தேதி யாரும் ஷூட்டிங்கிற்கு வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

Advertisment
Advertisements

அன்றைய தினம், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம். அனைவரும் அங்கு போக வேண்டும் என்பதால், அனறைய தினம் ஷூட்டிங் தொடங்க முடியவில்லை. 3 நாள் கழித்து செப்டம்பர் 8-ந் தேதி தொடங்கியது.  ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளே காலை 7 மணிக்கு வர வேண்டிய விஜய் 11.30 மணிக்கு வந்தார். டைமிங் கீப்பப் பண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் எஸ்.ஏ.சி. 7 மணிக்கு முதல் ஷாட் எடுக்க முடிவில்லை என்றால், கேமராமேனை கூப்பிட்டு அடித்துவிடுவார்.

அப்படிப்பட்ட ஸ்கூலில் இருந்த வந்த விஜய், முதல் நாள் படபடப்பாக லேட்டாக வந்தார். முதல் நாளே அவர் சைக்கிள் ஓட்டுவது போன்ற காட்சி. ஆனால் விஜய் லேட்டாக வந்ததாலும் விக்ரமன் சார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், படப்பிடிப்பு நடத்தியதாக கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: