ரஜினியை விஞ்சி விட்டாரா விஜய்? தமிழ் நடிகர்களின் சம்பளம் என்ன? | Indian Express Tamil

ரஜினியை விஞ்சி விட்டாரா விஜய்? தமிழ் நடிகர்களின் சம்பளம் என்ன?

Tamil Cinema Update : சமீபத்தில் பேசிய நடிகர் அருண்பாண்டியன் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று சொன்னார்.

ரஜினியை விஞ்சி விட்டாரா விஜய்? தமிழ் நடிகர்களின் சம்பளம் என்ன?

Tamil Cinema Update : சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளர் நடிகர் மற்றும் சினிமா பைனான்சியராக அருண்பாண்டியன், தமிழ் சினிமா பற்றி கூறியது பரபரப்பை ஏற்படுதுத்தியுள்ள நிலையில். தற்போது திரைப்பட நடிகரும் பத்திரிக்கையாளருமாக பயில்வான் ரங்கநாதன் இதற்கு பதில் கொடுத்துள்ளார்.

கருணாஸ் நடிப்பில் வெளியான அம்பாசமுத்திர அம்பாணி, ஜீவா நடிப்பில் வெளியான திருநாள் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ராம்நாத். இவர் தற்போது கருணாசை நாயகனாக வைத்து ஆதார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண்பாண்டியன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது இதில் பேசிய நடிகர் அருண்பாண்டியன், இன்று தமிழகத்தில் மற்ற மொழி திரைப்படங்கள் கொடி கட்டி பறந்துகொண்டிருக்கிறது. ஆனால் சமீபத்தில் வெளியான அஜித் விஜய் படங்கள் அவ்வளவாக போகவில்லை. சினிமாவுக்கு செலவு செய்வதில்லை. தனக்கு செலவு செய்கிறார்கள்.

படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் அவர்கள் வாங்கினால் படம் எப்படி எழுக்க முடியும். கண்டிப்பா எடுக்க முடியாது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கும்போது 10 சதவீதம் தான் நடிகர்களுக்கும் சம்பளம். 90 சதவீதம் படத்திற்காக செலவு செய்வோம். அப்படி இருந்தால் தான் நாம் மற்ற மொழி திரைப்படங்களுடன் செல்ல முடியும். அன்று நாம் கதை, மற்றும் மேக்கிங்கில் முன்னணியில் இருந்தோம் ஆனால் இப்போது அனைத்திலும் பின்தங்கியுள்ளோம். என்று கூறியுள்ளார்.

அருண்பாண்டியனின் கருத்துக்கு அதே மேடையில் பதில் அளித்த இயக்குநர் அமீர், ஒரு நடிகர் சம்பளம் வாங்குகிறார் என்று சொல்லக்கூடாது நாம் ஏன் கொடுக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். தமிழ் சினிமா பின்தங்கியுள்ளது என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். இந்தியாவிற்கே முன்னோடி தமிழ் சினிமா. ஒரு ஆர்ஆர்ஆர் ஒரு கேஜிஎஃப் –ஐ வைத்துக்கொண்டு நீங்கள் எடை போட்டீர்கள் என்று சொன்னால், தமிழ் சினிமாவில் படைப்புகளுககு ஈடுஇணையே கிடையாது. இங்கு இருந்துதான் நடிகர்கள் தொழில்நுட்க கலைஞர்கள் மற்ற மொழிகளுக்கு சென்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநான் அருண்பாண்டியனின் பேச்சு குறித்து கூறுகையில், தமிழ் சினிமாவில், விஜய் 100 கோடி, ரஜினிகாந்த், 80 கோடி, அஜித் 60 கோடி, சூர்யா 25 கோடி, தனுஷ் 25 கோடி, கமல்ஹாசன் 30 கோடி விக்ரம் 15 கோடி, கார்த்தி 10 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் இந்த தகவல்கள் உண்மையானதா என்றால், மெர்சல் படத்தில் விஜய் 80 கோடி சம்பளம் வாங்கியதாகம் அதற்கு சரியா முறையில் வரி கட்டிவிட்டதாகவும் வருமான வரித்துறை தகவல் அளித்துள்ளது. இது உண்மையான தகவல். சமீபத்தில் பேசிய நடிகர் அருண்பாண்டியன் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் இவர் அஜித் அல்லது விஜய் உள்ளிட்ட நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவில்லை.

இவர் இப்போது சினிமா பைனான்சியர்கள் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளராக உள்ளார். இவர் தன்னிடம் கடன் கேட்டு வரும் தயாரிப்பாளர்களிடம், நடிர்களுக்கு எவ்வளவு சம்பளம். கதை என்ன என்று கேட்கிறாரா வட்டிக்கு பணம்கொடுக்கிறார் அவ்வளவுதான். அதுமட்டுமல்லாமல் இன்று மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் யாவும் படம் தயாரிப்பதில்லை.

சமீபத்தில் தொடர்ந்து ரஜினிகாந்தின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த 3 படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இது குறித்து தயாரிப்பு நிறுவனமான சன்பிச்சர்ஸ் எதுவும் கூறவில்லை.

சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் வெற்றியடைந்தது. அதே சமயம் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்த ராதேஷியம் படம் தோல்வியடைந்தது. இதை வைத்து பார்க்கும்போது அருண்பாண்டியன் சொன்னது தவறு இல்லையா. ஒரு நடிகர் 80 கோடி சம்பளத்தில் நடிக்கிறார் என்றால், மற்றொரு தயாரிப்பாளர் 100 சம்பளம் தருவதாக கூறினால் கால்ஷீட் கொடுக்கத்தான் செய்வார்கள். சம்பளத்தை உயர்த்துவது நடிகர்ககள் அல்ல தயாரிப்பாளர்கள் தான்.

நடிகர்கள் சம்பளம் என்பது அவர்களுக்கு தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே தெரிந்தது. இதை யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள். தமிழ் சினிமா மட்டுமல்ல அனைத்திலுமே இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. சினிமா காலத்திற்கு ஏற்றாற் போல் மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் அருண்பாண்டியன் போன்றோரின் பேச்சு அப்பப்போ நடக்கும் விஷயங்கள் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor vijay preceded rajinikanth for salary