"ஆமாம்பா அப்படித்தான் பேசிக்கிறாங்க"... முதல் ரூ100 கோடி க்ளப் படத்துக்கு விஜய் ரியாக்ஷன்: எந்த படம் தெரியுமா?

பல படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்திருந்தாலும், ஒரு நடிகராக தனது படம் ரூ100 கோடி வசூலிக்க வேண்டும் என்பது அனைத்து நடிகர்களின் ஆசையாக இருக்கும்.

பல படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்திருந்தாலும், ஒரு நடிகராக தனது படம் ரூ100 கோடி வசூலிக்க வேண்டும் என்பது அனைத்து நடிகர்களின் ஆசையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Tamil Cinema Actor vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருந்தாலும், அவர் நடித்து முதன் முதலில் ரூ100 கோடி க்ளப்பில் இணைந்த படம் என்றால் அது துப்பாக்கி தான். இந்த வெற்றி குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கொடுத்த ரியாக்ஷன் குறித்து அவரது நண்பர் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

Advertisment

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய், அதன்பிறகு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய், திருமலை, கில்லி என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். பல படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்திருந்தாலும், ஒரு நடிகராக தனது படம் ரூ100 கோடி வசூலிக்க வேண்டும் என்பது அனைத்து நடிகர்களின் ஆசையாக இருக்கும்.

அந்த வகையில் விஜய்க்கு முதல் ரூ100 கோடி க்ளப்பில் இணைந்த படம் தான் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், விஜயுடன், காஜல் அகர்வால், சத்யன், வித்யூத் ஜாம்வால், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மக்களோடு மக்களாக கலந்திருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து அழிப்பது தான் இந்த படததின் திரைக்கதை.

ராணுவ பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும், பெங்காலி, மற்றும் இந்தியில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் அக்ஷைகுமார் நாயகனாக நடித்திருந்தார். தமிழை போலவே இந்தியிலும் இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து. இதனிடையே துப்பாக்கி படத்தின் 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

அதே சமயம் தற்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றுவிட்டதால், துப்பாக்கி 2 படம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பது பலருக்கும் தெரிந்துவிட்டது. இதனிடையே துப்பாக்கி படம் ரூ100 வசூலித்ததை கொண்டாடும் வகையில் விஜய் தனது நண்பர்களை அழைத்து, தனது வீட்டில் சிறிய பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் அவரது நெருங்கிய நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இது குறித்து நடிகர் ஸ்ரீதாத் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

@actorvijay 💎♥️😍"ஆமாம்பா அப்படித்தான் பேசிக்கிறாங்க" Thalapathy Vijay reaction when he's enter 1st 100CR club list for...

Posted by POVFC on Thursday, July 3, 2025

அதில், என்ன மாப்பு ரூ100 க்ளப்புக்குள் போயாச்சி, என்று நான் மிகவும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் விஜய், ஆமாப்பா அப்படித்தான் பேசிக்கிறாங்க என்று சாதாரணமாக சொன்னார். என்னது பேசிக்கிறாங்களா எப்படி இவ்ளோ லைட்டா எடுத்துக்கிறீங்க, நானே இதை மிகவும் சந்தோஷமா கொண்டாடிக்கிட்டு இருக்கேன். அவருடைய மகிழ்ச்சி துக்கம் எதுவாக இருந்தாலும் ரொம்ப கன்ட்ரோலா இருக்கும். வெற்றி தோல்வி இரண்டும் அவருக்கு ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.

Thalapathy Vijay Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: