வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்த நடிகர் விஜய் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் நடித்துள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகிபாபு என பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளர்.
தமன் இசையமைத்துள்ள வாரிசு படத்தில் இருந்து ஏற்கனவே ரஞ்சிதமே, தீ தளபதி, மற்றும் அம்மா செண்டிமெண்ட பாடலல் என 3 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் இன்று (டிசம்பர்24) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சில வருட இடைவெளிக்கு பிறகு விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
இதனிடையே இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி லைவாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும்பாலான ரசிகர்கள் டிவியில் லைவாக பார்க்க முடியவில்லையே என்று சோகத்தில் இருந்தாலும் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் விழா மேடையில் நின்று ரசிகர்களுடன் செல்பி வீடியோ ஷூட் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வெளியிட்ட சில நிமிடங்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்த இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். மேலும் தங்களது கருத்துக்களையும் வாரிசு படம் வெற்றியடைய வாழ்த்துக்களையும் காமெண்ட் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக செய்தியாளர்ளை சந்தித்த விஜய் ரசிகர்கள் பலரும் அவர் இந்த விழாவில் என்ன குட்டி ஸ்டோரி சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறியிருந்தனர். மேலும் சிலர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் இளைஞர்களை சரியான பாதைக்கு கொண்டு செல்வதாகவும், மக்களுக்கு தேவையான ரொட்டி பால் திட்டம், கண் தானம் திட்டம் என அனைத்தையும் தொடங்கியுள்ளார். அவர் வழியில் நாங்கள் அதை செயல்படுத்தி வருகிறோம் என்று கூறியிருந்தனர்.
பெரும்பாலான ரசிகர்கள் குட்டி ஸ்டோரிக்காக வெயிட்டிங் என்று கூறியுள்ள நிலையில், விஜய் இந்த விழாவில் குட்டி ஸ்டோரி சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு பொதுவான ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. விஜய் கடைசியாக 4 வருடங்களுக்கு முன்பு மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“