தமிழ் சினிமாவில் 2-வது அதிக சம்பளம்: 'லியோ' விஜய்க்கு இத்தனை கோடியா?

லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

author-image
WebDesk
New Update
vijay cover

நடிகர் விஜய்

தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள லியோ படம் வெளியாக இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், இந்த படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்துள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 19-ந் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்து.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியில், லியோ படத்திற்காக நடிகர் விஜய் ரூ.120 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 கோடி பட்ஜெட்டில் 'லியோ' படம் உருவாகியுள்ளதாகவும், இப்படத்தில் டைட்டில் ரோலில் நடித்துள்ள விஜய்க்கு 120 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் ரஜினிகாந்தைத் தொடர்ந்து, கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் 2-வது நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் விஜய். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகவும், அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள ஒரு நடிகராவும் மாறியுள்ள நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். மாஸ்டர் படத்திற்காக ரூ100 கோடி சம்பளம் பெற்ற விஜய் தற்போது அதனை தாண்டியுள்ளார்.

Advertisment
Advertisements

ஆக்ஷன் கதையம்சம் கொண்ட லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: