Advertisment

விஜயகாந்துடன் இணைந்து நடித்தது இதற்குத்தான் : விஜய் சொன்ன ஃபிளாஷ்பேக்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்.

author-image
WebDesk
New Update
விஜயகாந்துடன் இணைந்து நடித்தது இதற்குத்தான் : விஜய் சொன்ன ஃபிளாஷ்பேக்

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகரான விஜய் தனது திரைவாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் விஜயகாந்துடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருப்பார். இந்த காம்போ உருவானது எதற்காக என்பது குறித்து விஜய் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, ஈட்டி, நூறாவது நாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தொடக்கத்தில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரான உயர்ந்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர். தான் நடிகராக இருந்த காலகட்டத்திலும், அரசியலில் இருந்து காலட்டத்திலும் ஏராளமாக உதவிகளை செய்துள்ள விஜய்காந்த், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கு சமமான உணவு வழக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்

மேலும் நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், உதவி என்று யார் கேட்டாலும் அனைவருக்கு உதவுபவர் என்று அவருடன் இருந்த பலரும் கூறியுள்ளனர். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த் குறித்து பிரபலங்கள் பலரும் நாள்தோறும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் கடந்’த சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகரான விஜய் ஆரம்பகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகான அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2-வது படம் செந்தூரப்பாண்டி.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு நீண்ட கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். படத்தின் தொடக்கத்தில் சிறைக்கு செல்லும் விஜயகாந்த் இறுதியிலும் சிறைக்கு செல்வது போல்தான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். விஜய்க்காக எழுதிய இந்த கதையில் விஜயகாந்த் நடிக்க காரணம் என்ன என்பது குறித்து விஜய் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், சினிமாவில் கிளாஸ் ஆடியன்ஸ் மாஸ் ஆடியன்ஸ் என்று இரு வகை உண்டு. இதில் மாஸ் ஆடியன்ஸ் என்றால் ஒரு ஹீரோவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பாடி பார்த்தால் அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி அண்ணன் விஜய்காந்த் மாஸ்தான். அவரை வைத்து என் அப்பா ஒரு படம் இயக்கும்போது அதில் அவரின் தம்பியா என்னை நடிக்க வைத்தார்.

இந்த படத்தில் விஜயகாந்த் சாரை பார்க்க வரும் ஆடியன்ஸ்க்கு நானும் அறிமுகமாகிறேன். எனக்காகத்தான் இந்த படம் பண்ணது. அந்த படம் வெற்றி பெற்றது நாங்கள் நினைத்து எல்லாம் நடந்தது என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment