Advertisment

சூதாட்ட நாயகனாக விஜய் சேதுபதி? வி.ஜே.எஸ்51 படத்தின் டைட்டில் வைரல்

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் அவரின் 51-வது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
vijay Sethupathi Movie

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், அவர் நடித்து வரும் 51-வது படத்தின் டைட்டில் டீசர் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பல படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லமல், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி நாயகன் மட்டுமல்லாமல், வில்லன் மற்றும் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இதனால் மற்ற மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது,

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் இந்தியில் வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ், மற்றும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் என இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. தற்போது விஜய் சேதுபதி தமிழில் தனது 50-வது படமாக மகாராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 51-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக விஜேஎஸ் 51 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ஏஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் படம் சூதாட்டத்தை பற்றிய கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் யோகிபாபு, கன்னட நடிக்கை ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மலோசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி பிஸியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment