பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாக துணை நடிகர் மகான் காந்தி தொடர்ந்த வழக்கில், விஜய் சேதுபதி கட்டுப்பாடுடன் இருந்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ஹீரோ என்று இல்லாமல் வில்லன் குணச்சித்திரம் உள்ளிட்ட பல கேரக்டர்களில் விஜய் சேதுபதி தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் பல மொழிகளில் அவருக்கான மார்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது.
இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விஜய் சேதுபதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது துணை நடிகர் மகான் காந்தி என்பவர் விஜய் சேதுபதிய சந்தித்த போது, அவர் கைக்குலுக்க மறுத்து பொதுவெளியில் தன்னை தாக்கியதாக கூறியிருந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மீது வழக்கும் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், விஜய் சேதுபதி நேரில் ஆஜாக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி விஜய் சேதுபதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், லாப நோக்கில் நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை அபராதத்துடன் ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஜய் சேதுபதிக்கு எதிரான மனுவை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், தன் மீதான அவதூறு வழக்கை விஜய்சேதுபதி 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான அமர்வு, மனுதாரர் தெரிவித்த கருத்துக்ககள் பொதுவெளியில் கவனம் ஈர்க்கின்றன.
ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் பொதுவெளியில் கட்டுப்பாட்டுடன் நடந்திருக்க வேண்டும். பொறுப்புள்ள நபராக யாரையம் அவதூராக பேசக்கூடாது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தி மார்ச் 1-ந் தேதி இது தரப்பும் ஆஜராக உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/