சீன மொழியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்: தாக்கத்தை ஏற்படுத்துமா? போஸ்டர் வைரல்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நடப்பு ஆண்டில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நடப்பு ஆண்டில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Vijay Sethupathi Maharaja

விஜய் சேதுபதியின் 50-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியான மகாராஜா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த படம் சீனாவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் மகாராஜா. நாயகி இல்லாத இந்த படத்தில் விஜய் சேதபதியுடன், நட்டி நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேற்று (ஜூன் 14) இந்த படம் பிரம்மாண்டாக வெளியானர்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் மகாராஜா படம் இந்த ஆண்டில் பெரிய ஓப்பனிங் பெற்ற 3-வது படமாக மாறியது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படத்தில் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததே படத்தின் முதல் நாள் வசூலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. போட்டிக்கு படங்கள் இருந்தாலும் ஒடிடி தளத்தில் வெளியான பின்னரும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த மகாராஜா திரைப்படம் ரூ100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. 

Maharaja Movie

Advertisment
Advertisements

நெட்ஃபிளக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான மகாராஜா 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில், இந்தியில் தற்போது ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில், அமீர்கான் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே தற்போது மகாராஜா திரைப்படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வரும் நவம்பர் 29-ந் தேதி சீனாவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அலிபாபா குடுமம் இந்த படத்தை சீனாவில் வெளியிடுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Sethupathi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: