scorecardresearch

அங்கிள் நீங்க வரவே மாட்டீங்களா? அடம் பிடித்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த லியோ படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில் அடுத்த வாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Actor Vijay
நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது ரசிகர்களின் மகளுடன் வீடியோ காலில் உரையாடிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ்ஆபீஸ் கிங் என்று அழைக்கப்படும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வாரிசு படம் வெளியானது. பெரிய இடைவெளிக்கு பிறகு விஜய் குடும்ப படத்தில் நடித்த வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பெரிய சாதனை படைத்தது.

வாரிசு படத்திற்கு பிறகு விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. கடந்த வாரம் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த லியோ படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பை தொடங்க உள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயை பார்க்க வேண்டும் என்று சிறுமி ஒருவர் பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வைரலாக்கினர். இந்த தகவல் விஜய்க்கு சென்றடைந்த நிலையில், தன்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சிறுமியிடம் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ பதிவை விஜய் ரசிகர்கள் மன்ற தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor vijay speak audio call to his fan child viral video