Actor Vijay Statue In Tamilnadu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய். ரசிகர்கள் மத்தியில் தளபதி என்ற பட்டம் பெற்ற இவர் தனது கடின உழைப்பினால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா மற்றும் ஆந்திராவிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் அதனை திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர்.
Advertisment
மேலும் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்களை ஒன்று திரட்டியுள்ள நடிகர் விஜய் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டஉதவிகளை செய்து வருகிறார். கொரோனா ஊரடஙகு காலத்திலும் விஜய் ரசிகர்கள் பல பகுதிகளில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் வசூல் நாயகன் என்று பெயரெடுத்துள்ள நடிகர் விஜய்க்கு மங்களூர் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவருக்கு சிலை வைத்துள்ளனர்.
Advertisment
Advertisements
இந்த சிலை திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிலையை விஜய் மக்கள் இயக்கத்தின் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்துள்ளார். கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil