Advertisment

விஜயுடன் இளம் ஒளிப்பதிவாளர் : இப்போ இவர் முன்னணி நடிகர் : யார்னு கண்டுபிடிங்க!

தளபதி விஜயுடன் ஒரு இளம் ஒளிப்பதிவாளர் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vijay And Ilavarasu

விஜயுடன் இளம் ஒளிப்பதிவாளர்

இணையத்தில் வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், அவ்வப்போது சினிமா பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் வெளியாகி, இவரை யார் என்று தெரிகிறதா என்று இணையத்தில், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது தளபதி விஜயுடன் பிரபலம் ஒருவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில், ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களை கைவசம் வைத்திருக்கும் இந்த நடிகர், பாரதிராஜா இயக்கததில் வெளியான, கருத்தம்மா, சீமான் இயக்கத்தல் வெளியான பாஞ்சாலங்குறிச்சி, விஜய் நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய், பிரபு தேவா நடிப்பில் வெளியான ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ள இவர், சிவாஜி நடிப்பில் வெளியான முதல் மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பாரதிராஜாவின், இதயகோவில், கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, மணிவண்ணன் இயக்த்தில் சந்தனக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த இவர், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த நடிகரும் ஒளிப்பதிவாளரும் யார் தெரியுமா?

Vijay And Ilavarasu

அவர் தான் இளவரசு. விஜய், அஜித், சூர்ய, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இளவரசு, மனம் விரும்புதே உன்னை படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்க அரசின் விருதை வென்றுள்ளார். அதேபோல், முத்துக்கு முத்தாக, உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பின் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த இளவரசு, சமீபத்தில் வெளியான ரோமியோ, டியர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தளபதி விஜயின் திரை வாழ்க்கையில் அவருக்கு முக்கிய வெற்றிப்படமாக அமைந்த பூவே உனக்காக படத்தில், ஒரு பாடல் காட்சியின் போது, விஜயுடன் இளவரசு இருக்கும் புகைப்படம் தான் இது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகாகள் பலரும் அந்த நடிகராக இவர் என்று ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment