நிச்சயத்திற்கு பின் முதல் போன் கால்; பயந்து நடுங்கிய பிரேமலதாவுக்கு கேப்டன் கொடுத்த அட்வைஸ்!

விஜயகாந்த் தன்னிடம் முதன்முதலாக பேசிய அனுபவத்தை அவரது மனைவி பிரேமலதா நேர்காணல் ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார். குறிப்பாக, தனக்கு விஜயகாந்த் கூறிய அட்வைஸையும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் தன்னிடம் முதன்முதலாக பேசிய அனுபவத்தை அவரது மனைவி பிரேமலதா நேர்காணல் ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார். குறிப்பாக, தனக்கு விஜயகாந்த் கூறிய அட்வைஸையும் அவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
VIjayakanth

தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல் வரலாறை எடுத்துக் கொண்டால், அதில் விஜயகாந்தின் பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்கும். அந்த அளவிற்கு இரு துறைகளிலும் ஆளுமை மிக்க மனிதராக விஜயகாந்த் இருந்தார்.

Advertisment

ஏனெனில், நஷ்டத்தில் இருந்து நடிகர் சங்கத்தை லாபகரமாக மாற்றுவதற்கு அனைத்து நடிகர்களையும் அழைத்துச் சென்று கலை விழா நடத்திய பெருமை விஜயகாந்திற்கு இருக்கிறது. இது விஜயகாந்த என்ற ஒரு மனிதரால் மட்டுமே சாத்தியமானது என்று பலரும் கூறி நாம் கேட்டிருப்போம்.

இதே போன்றதொரு ஆளுமையை தனது அரசியல் களத்திலும் விஜயகாந்த் வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டு அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என்று இரு பெரும் தலைவர்கள் முதன்மையாக இருந்த நேரத்தில் மூன்றாவதாக ஒரு தலைவர் உருவாக முடியும் என்று எடுத்துக் காட்டியவர் விஜயகாந்த். இவை அனைத்திற்கும் அரசியலில் அவர் அடைந்த வெற்றிகளே சாட்சியாக இருக்கிறது.

இவ்வளவு பெருமைகள் விஜயகாந்திற்கு இருந்தாலும், தமிழ் மொழி மீது அவர் கொண்ட பற்று மற்றும் மரியாதை அவரை மேலும் ஒரு படி உயர்த்தியது என்று கூறலாம். இதற்கு எடுத்துக்காட்டாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார். கலா மாஸ்டருடனான ஒரு நேர்காணலின் போது இந்த தகவலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisment
Advertisements

அதன்படி, "விஜயகாந்த் என்னை பெண் பார்த்து விட்டுச் சென்றார். அவருக்கு என்னை பிடித்திருந்ததாகவும், திருமணத்திற்கான பணிகளை தொடங்குமாறும் கூறினார். முதலில் நிச்சயதார்த்ததிற்கான தேதி குறிக்கப்பட்டது.

திருமணம் உறுதி செய்யப்பட்டதால் இனி நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளலாம் என்று எங்கள் இருவீட்டாரும் கூறினார்கள். ஆனால், விஜயகாந்த அதற்கு சம்மதிக்கவில்லை. அவ்வளவு பெரிய நடிகராக இருந்த போதிலும் கலாசாரத்தை விட்டுக் கொடுக்கும் தன்மை விஜயகாந்திற்கு கிடையாது.

இதையடுத்து, வீட்டில் இருந்த பெரியவர்கள் அனைவரும் தொலைபேசியில் பேசுமாறு கூறினார்கள். அப்போதும் கூட விஜயகாந்துடன் பேசுவதற்கு எனக்கு பயமாக இருந்தது. ஒருவரையொருவர் பரஸ்பரமாக நலம் விசாரித்துக் கொண்டோம்.

என்னிடம் முதன்முதலாக விஜயகாந்த் பேசிய விஷயமே, அவருடைய தமிழ்ப்பற்று தான். தமிழ் மீது தனக்கு எந்த அளவிற்கு மரியாதை உள்ளது என்பதை விஜயகாந்த் எடுத்துரைத்தார். குறிப்பாக, தமிழ் உச்சரிப்பு குறித்து எனக்கு அட்வைஸ் செய்தார்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Premalatha Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: