scorecardresearch

நம்பிக்கை இல்லாத விஜயகாந்த்… அவருக்கே சர்ப்ரைஸ் கொடுத்த படம்… இயக்குனர் ஃப்ளாஷ்பேக்

நான் பேச் வொர்க் செய்வது போல் இந்த படத்தை எடுத்ததால் விஜயகாந்த் சாருக்கு படம் நல்லா வருமா என்ற டவுட் இருந்தது.

நம்பிக்கை இல்லாத விஜயகாந்த்… அவருக்கே சர்ப்ரைஸ் கொடுத்த படம்… இயக்குனர் ஃப்ளாஷ்பேக்

விஜயகாந்த் நம்பிக்கை இல்லாமல் நடித்து அவரே ஆச்சயப்படும் அளவுக்கு வெற்றியை கொடுத்த படம் குறித்து இயக்குனர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கேயார் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, ஈட்டி, நூறாவது நாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தொடக்கத்தில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரான உயர்ந்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர். திரைத்துறையில் மட்டுமல்லாது பொதுமக்ளுக்கும் முடிந்த அளவு உதவிகளை செய்துள்ள விஜய்காந்த், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கு சமமான உணவு வழக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்

தற்போது உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த் குறித்து பிரபலங்கள் பலரும் நாள்தோறும் பேசி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் இயக்குனர் விநியோகஸ்தர் கேயார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர் படம் குறித்து பேசியுள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் அலெக்சாண்டர். சங்கீதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீஹாரி, நிழல்கள்ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் தீபாவளி தினத்தில் கமலின் அவ்வை சண்முகி படத்துடன் வெளியாகி பல திரையரங்குகளில் 100 நாட்களை கடந்துது. இந்த படத்தின் மூலம் கோயார் விஜயகாந்த் முதன் முதலாக இணைந்தனர்.

இந்த படம் குறித்து இயக்குனர் கேயார் ஒரு இன்டர்வியூவில் பேசும்போது, இந்த படத்தை இயக்கும்போது விஜய்காந்த் சாருக்கே இந்த படம் சரியா வருமா என்று ஒரு சந்தேகம் இருந்தது. இந்த படத்தின் கதையை பஞ்சு சார் இராவுத்தரிடம் சொல்லிவிட்டார். அதன்பிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை ஷூட்டிங் முடித்துவிட்டு அடுத்தநாள் என்ன செய்வது என்று ப்ளான் செய்துகொண்டிருப்பேன்.

அதன்படி அடுத்தடுத்த நாட்கள் ஷூட்டிங் சென்றது. நான் பேச் வொர்க் செய்வது போல் இந்த படத்தை எடுத்ததால் விஜயகாந்த் சாருக்கு படம் நல்லா வருமா என்ற டவுட் இருந்தது. அப்போது அவர் முன்னணி ஹீரோ நிறைய படங்கள் பண்ணிருப்பதால் அவருக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை. என் அசிஸ்டெண்ட்கிட்டலாம் என்னய்யா எடுக்கிறாரு வரராறு இதுங்கிறார் அதுங்கிறார் அவர்பாட்டுக்கு எடுத்துட்டு போய்க்கிட்டு இருக்காரு எனக்கு நம்பிக்கை இல்லை.

டேட் கொடுத்தாச்சு நான் நடித்து கொடுத்துட்டு போறேன். அப்படி சொல்லியிருக்கிறார். அதன்பிறகு படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ஃபைனல் அவுட்புட் வரும்போதுதான் விஜயகாந்த் சாருக்கு நம்பிக்கை வந்தது. 4 பாடல் 6 ஃபைட் சீன் படத்தில் இருந்தது. சிம்பிளான கதைதான் என்றாலும் ஸ்கிரீன்ப்ளே இன்ஸ்ட்ரடிங்க பண்ணிருந்தோம்.

1996-ம் ஆண்டு தீபாவளி தினத்தில் அவ்வை சண்முகி படத்துடன் அலெக்சாண்டர் வெளியானது. சரியான மழைக்காலமாக இருந்தாலும் பல திரையரங்குகளில் அலெக்சாண்டர் படம் 100 நாட்களை கடந்து ஓடியது. இந்த படத்தின் மூலம் கார்த்திக் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார்.

படத்தை பார்த்து விஜயகாந்த் நான் எதிர்பார்க்கவே இல்லை. எதேதோ பண்ணி சரியா கொண்டுவந்துட்டாரே என்று சொன்னார். அதேபோல் நான் படம் இயக்கும் காலக்கட்த்தில் எனக்கு கம்பர்டபுளான ஆர்டிஸ்ட் என்றால் அது விஜயகாந்த் சார்தான் என்று கூறியுள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor vijayakanth alexander movie flashback

Best of Express