தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்த கேப்டன் விஜயகாந்த், சினிமாவில் நடிகர் இயக்குனர் தாயரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வந்தார். இவர் முதன் முதலில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும்போது, அவர் சொன்ன ஒரு வார்த்தை நெகிழ வைத்தது என்று அவரை வைத்து படம் இயக்கிய அரவிந்த் ராஜ் கூறியுள்ளார்.
1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விஜயகாந்த். அதனைத் தொடர்ந்து அகல் விளக்கு நீரோட்டம், தூரத்து இடி முழக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், 1981-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் தான் விஜயகாந்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது. இந்த படம் பெரிய வெற்றியையும் பெற்றது.
அதன்பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜயகாந்த், பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல் திரைப்பட கல்லூரியில் இருந்து வெளியில் வரும் மாணவர்களுக்கு, யாரும் வாய்ப்பு கொடுக்காத நிலையில், ஊமை விழிகள் என்ற படத்தை அவர்களுக்கு கொடுத்து திரைப்பட கல்லூரி மாணவர்களின் வருகைக்கு வழி செய்தவர் விஜயகாந்த். அதேபோல் புதுமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
சினிமா மட்டுமல்லாமல், அரசியலிலும் தடம் பதித்த விஜயகாந்த், குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்து அசத்தினார். திரைப்படங்களில் தான் நடிக்கும்போது ஆரம்பத்தில், ஹீரோ வந்ததால், சாப்பிட விடாமல் நடிக்க அழைத்ததாகவும், அதனால் தான், ஹீரோவாக மாறியவுடன் அனைவருக்கும் சமமான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த விஜயகாந்த் அதை நிகழ்த்தியும் காட்டியுள்ளார். தான் நடிக்கும் படத்தின் தான் என்ன சாப்பிடுகிறேனோ அதையே மற்றவர்ளும் சாப்பிட வேண்டும் என்று விரும்பியவர்.
நடிகராக இருந்த விஜயகாந்த் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான உழவன் மகன் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். இந்த படத்திற்கான கதை எல்லாம் முடிவு செய்யப்பட்டு கலந்தாய்வு நடந்தபோது, அங்கே வந்த விஜயகாந்த், தயாரிப்பு நிறுவனம் தொடங்கி முதல் படம். எம்.ஜி.ஆர் இதை செய்துவிட்டார். ஆனால் அவரை விட சிறப்பாக நாம் செய்ய வேண்டும். அதனால் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமமான சாப்பாடு போதுமான அளவு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஊமை விழிகள் படத்தை அவரை இயக்கி இயக்குனராக அறிமுகமான திரைப்பட கல்லூரி மாணவர் அரவிந்த் ராஜ் தான் உழவன் மகன் படத்தை இயக்கினார். ஆபாவாணன் கதை எழுதிய இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.