குருவுக்கே 'நோ' சொன்ன கமல்: உடனடியாக வந்த கேப்டன்; கே.பாலச்சந்தர் படத்தில் விஜயகாந்த் நடித்தது எப்படி?

தனது குரு கே.பாலச்சந்தர் கேட்டும் கமல்ஹாசன் நடிக்க மறுத்ததால். அவர் நடிக்க வேண்டிய கேரக்டரில், விஜயகாந்த் நடித்து கொடுத்துள்ளார்.

தனது குரு கே.பாலச்சந்தர் கேட்டும் கமல்ஹாசன் நடிக்க மறுத்ததால். அவர் நடிக்க வேண்டிய கேரக்டரில், விஜயகாந்த் நடித்து கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
K Balachandar Vijayakanth

கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் என்றாலும், தனது படத்தில் ஒரு காட்சியில் நடிக்க, கமல்ஹாசனை அழைத்தபோது அவர் மறுத்துவிட்டதால், அந்த வாய்ப்பு கேப்டன் விஜயகாந்துக்கு சென்றுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கேப்டன் என்று அழைக்கப்பட்ட இவர், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டவர். அதன்படி தொடர்ந்து அதை தனது படத்தின் படப்பிடிப்பில் கடைபிடித்தவர் விஜயகாந்த். மேலும் பல புதுமுக இயக்குனர்களுக்கு  வாய்ப்பு கொடுத்தவர்.

அதேபோல் தளபதி விஜய், சூர்யா ஆகியோர் தங்கள் சினிமா வாழ்கையில் முன்னிலை பெற அவர்களது படங்களில், துணை கேரக்டரில் நடித்திருந்த விஜயகாந்த், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஆனால் அவர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்காக கே.பாலச்சந்தர் விஜயகாந்தை அழைத்துள்ளார்.

1987-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் மனதில் உறுதி வேண்டும்.சுஹாசினி முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில், ரமேஷ் அரவிந்த், விவேக், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் வரும ‘வங்காள கடலே’ என்ற பாடலில், ரஜினிகாந்த் சத்யராஜ் விஜயகாந்த் ஆகியோர் நடித்திருப்பார்கள்.

Advertisment
Advertisements

இதில் விஜயகாந்த் நடித்த கேரக்டரில், முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் நடிகை சுஹாசினியுடன் அவர் ஆட வேண்டிய நிலை இருந்தது. கமல்ஹாசனின் அண்ணன் மகளான சுஹாசினி இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த பாடல் காட்சிக்காக கே.பாலச்சந்தர் கமல்ஹாசனிடம் கேட்டபோது, சுஹாசினி என் அண்ணன் மகள், நான் அவருடன் ஆடினால் அது செட் ஆகாது. நன்றாக இருக்காது என்று கூறி மறுத்துள்ளார்.

அதன்பிறகு இந்த வாய்ப்பு விஜயகாந்துக்கு சென்றுள்ளது. அவரும் கே.பாலச்சந்தர் அழைத்ததன் பேரில், அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு வந்து இந்த பாடல் காட்சியில் நடித்து கொடுத்துள்ளார். இதற்காக இயக்குனர் கே.பாலச்சந்தர் சம்பளம் கொடுத்தபோது, நான் உங்கள் மீது இருக்கும் மரியாதைக்காக இதை செய்தேன். எனக்கு சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். 

k Balachandar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: