கமர்ஷியல் டூ எமோஷ்னல்; கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் மிஸ் பண்ண கூடாத டாப் 10 படங்கள்!

கேப்டன் விஜயகாந்தின் பிறந்த தினமான இன்று (ஆகஸ்ட் 25) தேமுதிக கட்சியினர், அவரது ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். அவரது சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக விஜயகாந்த் வித்தியசமான நடித்த சில படங்களை பார்ப்போம்.

கேப்டன் விஜயகாந்தின் பிறந்த தினமான இன்று (ஆகஸ்ட் 25) தேமுதிக கட்சியினர், அவரது ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். அவரது சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக விஜயகாந்த் வித்தியசமான நடித்த சில படங்களை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Captain Vijayakanth

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றுவரை மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். அவரை போலவே சாதனை படைத்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் சாதித்த விஜயகாந்த் அரசியலிலும், குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக முத்திரை பதித்திருந்தார்.

Advertisment

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார், அவர் மறைந்தாலும் நாள்தோறும் அவரை பற்றிய தகவல்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே கேப்டன் விஜயகாந்தின் பிறந்த தினமான இன்று (ஆகஸ்ட் 25) தேமுதிக கட்சியினர், அவரது ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். அவரது சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக விஜயகாந்த் வித்தியசமான நடித்த சில படங்களை பார்ப்போம்.

சட்டம் ஒரு இருட்டறை (1981)

Sattam Oru I

1981-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான படம் சட்டம் ஒரு இருட்டறை. விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் முதல் பிரம்மாண்ட வெற்றிப்படமாக இந்த படம் அமைந்தது, தனது அப்பாவை கொலை செய்தவர்களை மகன் வளர்ந்து வந்து பழிவாங்கும் கதைதான் இந்த படம்.

நூறாவது நாள் (1984)

Advertisment
Advertisements

NN

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான இந்த படம், ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையை சார்ந்தது. இதில் மர்மத்தை கண்டுபிடிக்கும் திறமைசாளி சிஐடி அதிகாரியாக விஜயகாந்த் நடித்திருப்பார். இந்த படம் பலரின் கவனத்தை ஈர்த்து பெயரை போலவே நூறு நாட்களை கடந்து ஓடியது.

வைதேகி காத்திருந்தாள் (1984)

Vk

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் வைதேகி காத்திருந்தாள். காதலில் தோல்வியை சந்தித்த ஒருவன் ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சி தான் இந்த படம். இளையராஜா வைத்திருந்த சில பாடல்களை பயன்படுத்துவதற்காக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டதாக இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனே பல பேட்டிங்களில் கூறியுள்ளார்.

ஊமை விழிகள் (1986)

OV

திரைப்பட கல்லுரி மாணவர்கள் சினிமாவில் கால் பதிக்க முக்கியமாக அமைந்த படம் தான் ஊமை வழிகள். ஆபாவாணன் கதையில் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் வயதான தோற்றத்தில் காவல்துறை அதிகாரியாக கலக்கியிருப்பார்.

பூந்தோட்ட காவல்காரன் (1988)

PK

இயக்குனர் செந்தில்நாதனை இயக்குனராக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதால் எடுக்கப்பட்ட இந்த படத்திலும் விஜயகாந்த் வயதான கேரக்டரில் நடித்திருந்தார். காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் முயற்சியில் தனது உயிரையே விடும் கேரக்டர் தான் இந்த படத்தில் விஜயகாந்த் ஏற்று நடித்த கேரக்டர்.

கேப்டன் பிரபாகரன் (1991)

Captain pro

விஜயகாந்தின் 100-வது படமாக வெளியான இந்த படம் அவர் சினிமா வாழ்க்கையில் ஒரு அடையாளமாக மாறியது. இந்த படம் வெளியான காலக்கட்டத்தில், நாட்டையே கலக்கிக்கொண்டிருந்த வீரப்பனை பிடிக்கும் முயற்சியை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது இந்த படம்.

சின்ன கவுண்டர் (1992)

CG

கிராமத்து நாட்டாமை கேரக்டரை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அந்த வானத்தைபோல மனம் படைத்த மன்னவனே பாடல் இன்றும் விஜயகாந்தின் ஐகானிக் பாடலாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

ஹானஸ்ட் ராஜ் (1994)

Honest raj

துணிச்சல் மற்றும் திறமையான காவல்துறை அதிகாரியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்றாகும்.

வானத்தைப்போல (2000)

VP

விக்ரமன் இயக்கத்தில் வெளியான குடும்ப திரைப்படமான இந்த படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. விஜயகாந்தின் நடிப்பும் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

ரமணா (2002)

Ramana

ஊழலை ஒழிக்க ஒரு கல்லூரி பேராசிரியர் எடுக்கும் முயற்சி தான் இந்த திரைப்படம். அதே சமயம் சட்டத்தை கையில் எடுத்தால் அதற்காக தண்டடையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட படத்தின் க்ளைமேக்ஸ் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: