Tamil Cinema Actor Vijayakanth Native Place : தமிழ் திரையுலகில் கேப்டன் என்ற என்ற அடைமொழியுடன் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். நடிப்பு மட்டுமல்லாது தனது நல்ல குணத்திற்கும் பெயர் பெற்ற இவர், மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். ரஜினி கமல் ஆகிய இருவரும் பெரிய வெற்றிப்படங்கள் கொடுத்த காலத்தில் அவர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு திரைத்துறையில் வளர்ந்தவர் விஜயகாந்த்.
1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், தொடர்ந்து பல வெற்றிப்படங்களளை வசூலில் சாதனையும் படைத்திருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான விருதகிரி படத்தை இயக்கி நடித்திருந்த விஜயகாந்த், 5 வருட இடைவெளிக்கு பிறகு 2015-ம் ஆண்டு அவரது மகன் நடிப்பில் வெளியான சகாப்தம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
இதுவே விஜய்காந்தை ரசிகர்கள் கடைசியாக திரையில் பார்த்த படம். அதனிபிறகு தமிழன் என்று சொல் என்ற படம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்ட விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பேச முடியாமல் தவித்து வருகிறார். இதனால் படங்களில் நடிப்பது முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், சினிமா அரசியல் என எதிலும் தலையிடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் கூட விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவில்லை. சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியான அவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் தற்போது விஜயகாந்த் குணமடைந்து வருவதாகவும், விரைவில் அவர் நலம்பெற்று பழையபடி திரும்பி வருவார் என்று அவரர் குடும்பத்தினர் கூறி வருகினறனர்.
இதனால் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது யூ டியூப் சேனல் ஒன்று விஜயகாந்தின் பூர்வீக வீட்டின் அவல நிலை குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. வில்வேஜ் வுட் என்ற அந்த யூடியூப் சேனலில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்தவர் விஜயகாந்த்.
இவரின் தந்தை பெயர் அழகர்சாமி, அரசி ஆலையில் வேலை பார்த்த அவர், சில வருடங்களில் அந்த அரிசி ஆலையை சொந்தமாக வாங்கிவி்டார். அதன்பிறகு மதுரைக்கு குடிபெயர்ந்த விஜய்காந்த் குடும்பத்தினர் அங்கேயே வசிக்க தொடங்கிவிட்டனர்.
விஜயகாந்தின் குடும்பத்தினருக்கு, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காங்கேயம் என்ற ஊரில் அமைந்துள்ள வீர சின்னம்மமான் திருக்கோயில்தான் குலதெய்வம். விஜயகாந்த் தயாரித்த அனைத்து படங்களிலும் எங்கள் குலதெய்வம் வீரசின்னம்மான் ஆசியுடன் என்று டைட்டில் கார்டில் போட்டிருப்பார். சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்த விஜயகாந்த் தான்கால் பதித்த அனைத்து துறைகளிலும் சாதித்துள்ளார்.
மேலும் மக்கள் மத்தியில் நல்ல மனிதர் என்று பெயரெடுத்த விஜயகாந்த் தற்போதுவரை தன்னை தேடிவரும் அனைவரையும் சாப்பிட வைத்துதான் அனுப்புகிறார். அவரின் வீடு என்றாலும் அலுவலம் என்றாலும் வருவோருக்கு சாப்பாடு போடும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார். இவ்வளவு பெருமை வைத்துள்ள விஜயகாந்த், அவரின் பூர்வீக வீட்டை ஏன் இப்படி பாழடைந்து செல்லும் அளவுக்கு விட்டு வைத்துள்ளார் என்பது புரியவில்லை.
அவருடைய பூர்வீக வீட்டை கவனிக்காமல் விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை. இந்த இடத்தில் அவர் ஏதாவது கட்சி அலுவலகம் கட்டியிருந்தாலோ அல்லது ரசிகர் மன்றம் கட்டியிருந்தாலே அந்த ஏரியாவே பிரபலமாகியிருக்கும். விஜயகாந்த் சார் இதை மனதில் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். அவர் இல்லை என்றாலும் அவருடைய மகன்கள் இதை எடுத்து செய்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டு மக்கள் சார்பாக இந்த கோரிக்கை வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது யூ டியூப் தளத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜயகாந்தின் தற்போதைய நிலை குறித்து வருத்த்தையும் அவர் செய்த நன்மைகள் எடுத்து கூறி சந்தோஷத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.