தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள நடிகர் விஜயகாந்த் தற்போது ஆக்டிவாக இல்லை என்றாலும் அவரின் நினைவுகள் பழைய வீடியோக்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எம்.ஜி.ஆர் பிரச்சார வாகனம் குறித்து விஜயகாந்த் பேசிய வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் பெரும் போராட்டங்களுக்கு பிறகு ஹீரோவாக மாறி பின்னாளில் புரட்சி கலைஞர் என்ற அடைமொழியுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் விஜயகாந்த். சினிமாவில் அனைவரும் ஒரே மாதிரியான உணவைத்தான் சாப்பிட வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்த விஜயகாந்த், நடிகர் சங்கத்தின் கடனை அடைத்த நடிகர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
மேலும் சினிமாவில் பல உதவி இயக்குனர்களுக்கும், புதிய இயக்குனர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் வாய்ப்பை கொடுத்த விஜயகாந்த், சினிமா மட்டுமல்லாமல் குறுகிய காலத்தில் அரசியலிலும் தனது ஆளுமையை செலுத்தினார். கட்சி தொடங்கிய ஒரு சில வருடங்களிலேயே எதிர்கட்சி தலைவராக உயர்ந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார்.
தற்போது விஜயகாந்த் ஆக்டீவாக இல்லை என்றாலும் அவர் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், எம்.ஜி.ஆர் பிரச்சார வாகனம் குறித்து பேசியுள்ள விஜயகாந்த், 1994-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பிரச்சார வாகனம் எனக்கு கொடுக்கப்பட்டது. மதிப்பிற்குரிய அம்மையார் ஜானகி அம்மாள் அந்த வாகனத்தை எனக்கு கொடுத்தார்.
அந்த வாகனத்தின் எண் 2005. நானும் 2005-ம் ஆண்டு தான் அந் வாகனத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினேன். 2002-ல் அந்த எம்.ஜி.ஆர் பிரச்சார வண்டி விஜயகாந்திடம் செல்ல வேண்டும். விஜயகாந்த் அந்த வண்டியில் தான் பிரச்சாரம் போக வேண்டும் என்று நெற்றியில் எழுதி இருக்கிறது என்று விஜயகாந்த் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“