New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Vijayakth.jpg)
Tamil Cinema News Update : முன்னணி நடிகரான விஜயகாந்த், ஜிம் ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Tamil Cinema Actor Vijayakanth and Vijay Photo Viral : தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உள்ளவர் விஜய். 1984-ம் ஆண்டு வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பிறகு 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
ஆனால் ஒரு பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்பதிலும், விஜய் முன்னணி நடிகரான வளர வேண்டும் என்பதிலும் குறியாக இருந்த அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர், 1993-ம் ஆண்டு செந்துரபாண்டி திரைப்படத்தை தொடங்கினார். அப்போது முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த விஜயகாந்த் இந்த படத்தில் நடித்தால், விஜய் முன்னணி நடிகராக வளர துணையாக இருக்கும் என்று எஸ்ஏசி நினைத்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்துடன் அவர் பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் விஜயகாந்த் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் எஸ்ஏசிக்காக இந்த படத்தில் விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். மனேராமா விஜயகாந்த், கௌதமி, விஜய் யுவராணி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தின் கதை விஜய்யை சுற்றித்திதான் அமைந்திருக்கும்.
ஆனால் விஜய்யின் அண்ணனான நடித்த விஜய்காந்த் முக்கிய கேரக்டரில் நடித்தது இந்த படத்திற்கு பலமாக அமைந்தது. இந்நிலையில். தற்போது விஜயகாந்த் ஜிம்மில் விஜய்க்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் விஜயுடன் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.