scorecardresearch

விஜயகுமார் மகளுக்கு தாய் மாமன் சடங்குகளை செய்த சத்யராஜ்… ‘மணப் பெண்’ பகிர்ந்த சுவாரசிய போட்டோஸ்!

Tamil Cinema Update : நடிகர் சத்யராஜ் தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து நடிகர் விஜயகுமார் மகள் திருமணத்தில் மணமகளுக்கு சீர்வரிசை செய்துள்ளார்.

விஜயகுமார் மகளுக்கு தாய் மாமன் சடங்குகளை செய்த சத்யராஜ்… ‘மணப் பெண்’ பகிர்ந்த சுவாரசிய போட்டோஸ்!

TamilCinema actor Vijayakumar Daughter Shar Marriage Memories : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மகளுக்கு நடிகர் சத்யராஜ் தாயமாமன் ஸ்தானத்தில் சீர் செய்தது தொடர்பாக புகைப்படங்களை விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். தொடக்கத்தில ஹீரோவாக நடித்து பிறகு வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த விஜயகுமார் தற்போது சீரியல் மற்றும்ஒரு சில திரைப்பங்களில் நடித்து வருகிறார். இவரது குணச்சித்திர நடிப்பில் வெளியான சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே முத்துக்கண்ணு என்பரை திருமணம் செய்துகொண்ட விஜயகுமாருக்கு, கவிதா, அனிதா என்ற இரு மகள்களும், அருண்விஜய் என்ற ஒரு மகனும் உள்ளனர். திரைத்துறைக்கு வந்த பிறகு நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டார். இதில் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என 3 மகளகள் உள்ளனர். இதில் மூத்த மகள்களாக கவிதா மற்றும் அனிதா இருவரும் சினிமாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள்.

இந்நிலையில், மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற அனிதாவின் திருமணத்தின் போது திரைத்துறையில் உள்ள பலரும் கலந்துகொண்டனர். அப்போது அனிதாவின் தாய்மாமன் மண்டபத்தில் இல்லாததால் திருமணத்திற்கு வந்திருந்த நடிகர் சத்யராஜ் தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து சீர்வரிசை செய்துள்ளார். இது தொடர்பாக புகைப்படத்தை தற்போது அனிதா தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவில், திருமண சடங்கின்போது எனது மாமாவை காணவில்லை. அதனால் சத்யராஜ் அண்ணாதான் தாய் மாமன் ஸ்தானத்தில் இருந்து அத்தனை சடஙகுகளையும் எனக்காக செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்துடன், நடிகை ஸ்ரீதேவி அவரது கணவர் போனி கபூர், மற்றும் அனிதா தனது குடும்பத்திருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைராகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor vijayakumar daughter shar her marriage memories