Tamil Actor Vijayakumar Re-entry In Serial : சினிமா மற்றும் சின்னத்திரையில், வெற்றிக்கொடி நாட்டியவர்களில் முக்கிய இடம் பெற்றுள்ள தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமார், தற்போது சீரியலில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழில் 1961-ம் ஆண்டு வெளியான ஸ்ரீவள்ளி என்ற படத்தில் கடவுள் முருகன் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஜயகுமார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என பல பரினாமங்களில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய விஜயகுமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடித்த விஜயகுமார் பாட்ஷா படத்தில் ரஜினிக்கு அப்பாவாக முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். படங்களில் பிஸியா நடித்து வந்த விஜயகுமார் 2009-ம் ஆண்டு தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து, வம்சம், ராசாத்தி நந்தினி உள்ளிட்ட தொடர்களில் முதன்மை கேரக்டரல் நடித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு சன்டிவியின் ராசாத்தி சீரியலில் நடித்த விஜயகுமார் அதன்பிறக சின்னத்திரையில் வேறு எந்த சீரியலிலும் நடிக்காத நிலையில், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இதன் 2-வது சீன் ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியலில் ரீ-என்டரி ஆகியுள்ள விஜயகுமார் நடிக்கும் காட்சிகள் தொடர்பாக புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. டிஸ்னி + ஹாஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விஜயகுமாரின் மகள் வனிதா சக போட்டியாளர்கள் மத்தியில் அதகளம் செய்து வரும் நிலையில், தந்தை விஜயகுமார் சீரியலில் மாஸ் என்ட்ரி கொடுக்க உள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த வனிதா விஜயகுமார் தற்போது ஜீன்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ஜீ தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், மகள் இருக்கும் அதே சேனல் சீரியலில் அப்பா ரீ-என்டரி ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“