தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தற்போது தமிழக வெற்றிக் கழக அரசியல் கட்சி தலைவருமான விஜய், இன்று தனது கட்சியின் கொடியை அறிவித்த நிலையில், அவருக்கு பிடித்தமான எண், மற்றும் அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், பல விமர்சனங்கள், மற்றும் உருவ கேலிகளை கடந்து இன்று டாப் ஸ்டாராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். 60 படங்களுக்கு மேல் நடித்து தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள விஜய், தற்போது புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ள விஜய், கட்சியின் கொடியை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டிருந்தார். அதனுடன் சேர்ந்து கொடிக்கான பாடலும் இன்று வெளியிடப்பட்டது.
இதனிடையே கோட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இதுவே அவரின் கடைசி படமாக இருக்கும் என்றும், அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்கி வரும் நிலையில், விஜய்க்கு பிடித்தமான எண் என்ன? அது ஏன் அவருக்கு பிடித்தமானது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்க்கு பிடித்த எண் 4. அவரின் கட்சி கொடி அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 22-ந தேதியை எடுத்துக்கொண்டால், 2+2 4 என்று வருகிறது. அதேபோல் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜய், 1111 என்ற பதிவெண் கொண்ட காரில் வந்து இறங்கினார். இதில் அனைத்து எண்களையும் கூட்டினால் 4 வரும். அதேபோல் விஜயின் பிறந்த நாள் ஜூன் 22. இந்த இரண்டையும் கூட்டினாலும் 4 வரும். இதன் மூலம் விஜய்க்கு பிடித்த எண் 4 தான் என்றும், அதற்கு காரணம் அவர் பிறந்த தேதியாக கூட இருக்கலாம் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“